23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201701171520192203 chettinad brinjal fry SECVPF
செட்டிநாட்டுச் சமையல்

சூப்பரான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல்

கத்தரிக்காய் பிடிக்காதவர்களுக்கு கூட செட்டிநாடு கத்தரிக்காய் வறுவலை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சூப்பரான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல்
தேவையான பொருள்கள் :

கத்தரிக்காய் – 6
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கடலை மாவு – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

வறுத்து பொடிக்க :

தனியா – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1ஸ்பூன்
மிளகு – அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

* கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைத்து சற்று கொரகொப்பாக பொடித்து கொள்ளவும்.

* கத்தரிக்காயை வட்டவட்டமாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

* அடுத்து தண்ணீரை வடித்து விட்டு அதன் மேல் மிளகாய் தூள், கடலைமாவு, மஞ்சள் தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கத்தரிக்காயின் மேல் எல்லா இடங்களிலும் படும் படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெயை ஊற்றவும்.

* தோசை கல் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கத்தரிக்காய் துண்டுகளை பொடித்து வைத்த மசாலாவில் பிரட்டி தோசை கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விடவும். 2 நிமிடம் ஆனதும் திருப்பி போடவும்.

* இருபுறமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும். மீதமுள்ள எல்லா கத்தரிக்காய் துண்டுகளையும் இதே முறையில் வறுத்து எடுக்கவும்.

* சுவையான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல் ரெடி.

* சாம்பார் சாதம், தயிர் சாதம் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். 201701171520192203 chettinad brinjal fry SECVPF

Related posts

செட்டிநாடு இறால் சுக்கா

nathan

சுவையான செட்டிநாடு பூண்டு ரசம்

nathan

செட்டிநாடு அவித்த முட்டை பிரை

nathan

சுவையான செட்டிநாடு இறால் குழம்பு

nathan

செட்டிநாடு சிக்கன் கிரேவி

nathan

தேங்காய் சேர்க்காத செட்டிநாடு மீன் குழம்பு

nathan

செட்டிநாடு கோழி குழம்பு

nathan

செட்டிநாடு மட்டன் குழம்பு

nathan

செட்டிநாடு மசாலா குழம்பு

nathan