என்னென்ன தேவை?
தரமான பெரிய பாதாம், சர்க்கரை, பசும் நெய் – தலா 100 கிராம்,
குங்குமப்பூ – 1 சிட்டிகை,
கோதுமை மாவு – 1 டீஸ்பூன்,
விரும்பினால் ஜாதிக்காய்த் தூள் – சிறிது.
எப்படிச் செய்வது?
ஃப்ரெஷ்ஷான பாதாமை வெறும் கடாயில் வறுத்து ஆறவிட்டு, மிக்சியில் பவுடராக அரைக்கவும். தவாவில் நெய் விட்டு சூடாக்கியதும் கோதுமை மாவு, பாதாம் தூளை சேர்த்து கைவிடாமல் வதக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 1/4 கப் தண்ணீர் விட்டு அதில் குங்குமப்பூவை போடவும். சர்க்கரை கரைந்து தேன் போல் வந்ததும் அதை பாதாம் கலவையில் கொட்டி கிளறவும். இது சுருண்டு அல்வா பதம் கரண்டியால் எடுக்கிற மாதிரி இருக்க வேண்டும். ஆறியதும் ஸ்டோர் செய்யவும்.
குறிப்பு: மார்வாடி களின் குடும்பத்தில் குறிப்பாக பிரசவித்த பெண்கள், வயது வந்த பெண்களுக்கு கண்டிப்பாக கொடுப்பார்கள். உடம்பிற்கு சத்து கொடுக்கும். குழந்தைக்கு பலம் உண்டாகும்