23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
13 1439468995 5 honeyandmilk
ஆரோக்கிய உணவு

இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும் பானங்கள்!!!

ஒருவருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆனால் இந்த தூக்கத்தை இன்றைய கால இளைஞர்களால் சரியாக பெற முடிவதில்லை. இதற்கு மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் தான் முக்கிய காரணம். ஆனால் இரவில் தூங்கும் முன் ஒருசில பானங்களை குடித்தால், செரிமான பிரச்சனைகள் இல்லாமல் நல்ல அமைதியான மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

மேலும் ஆராய்ச்சியாளர்களும், இரவில் தூங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன் ஒருசில பானங்களைக் குடித்தால், நல்ல தூக்கத்தைப் பெறலாம் என்று கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, மறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடனும் இருக்கக்கூடும் என்றும் சொல்கின்றனர்.

ஆனால் இரவில் காபி குடிக்கக்கூடாது. ஏனென்றால் காபி தூக்கத்தைக் கலைத்து, சுறுசுறுப்புடன் இருக்கச் செய்யும். அதேப்போல் சர்க்கரையையும் அதிகம் சேர்க்கக்கூடாது, இதுவும் தூக்கத்தைக் கலைத்துவிடும்.

இங்கு இரவில் படுக்கும் முன் எந்த பானத்தைக் குடித்தால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

புதினா டீ நல்ல வெதுவெதுப்பான நீரில் புதினாவைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து தேன் கலந்து குடித்தால், இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

சீமைச்சாமந்தி டீ சர்க்கரை சேர்க்காத சீமைச்சாமந்தி டீயை இரவில் படுப்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடித்தால், நரம்புகள் தளர்ந்து, மன அழுத்தம் குறைந்து, நல்ல தூக்கத்தைப் பெற முடியும்.

வெதுவெதுப்பான பால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, இரவில் படுக்கும் முன் குடித்து வர, உடல் நன்கு ரிலாக்ஸ் ஆகி, ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்.

பாதாம் பால் பாலில் உள்ள வைட்டமின் ஈ, இரவில் இனிமையான தூக்கத்தைப் பெற உதவும். அதிலும் பாதாம் பாலை டின்னர் முடிந்து குடித்து, 1 மணிநேரம் கழித்து தூங்கினால், நன்கு தூக்கம் வரும்.

தேன் வெதுவெதுப்பான பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடித்தால், இரவில் தூக்கம் சீக்கிரம் வருவதோடு, மறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்வீர்கள்.

இஞ்சி டீ இஞ்சி டீயை இரவில் குடித்தால், உணவுகள் எளிதில் செரிமானமாகி, செரிமான பிரச்சனைகளின்றி நல்ல ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

13 1439468995 5 honeyandmilk

Related posts

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை தரும் சிறப்பான உணவுகள்!!!

nathan

பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்குமா?

nathan

சர்க்கரை நோயாளிகள் மீன் சாப்பிடுவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க… வெள்ளை ஒயின் உடலுக்கு ஆபத்தானதா?

nathan

மைக்ரோவேவ் செய்யும் அற்புதமான மாயங்கள்!

nathan

இந்த ஒரு பொருள சேர்க்காததால தான் புற்றுநோய் வருதுன்னு உங்களுக்கு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

வெள்ளரி…உள்ளே வெளியே

nathan

தெரிஞ்சிக்கங்க…பிளாக் டீ குடிப்பதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா போலியான தேனை எப்படி கண்டறியலாம்?

nathan