29.2 C
Chennai
Sunday, Jul 13, 2025
இனிப்பு வகைகள்

முப்பால் கருப்பட்டி அல்வா

தேவையானவை: ராகி, கோதுமை, கம்பு – தலா ஒரு கப், தூளாக்கிய கருப்பட்டி – 2 கப், நெய் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.

செய்முறை: ராகி, கோதுமை, கம்பு மூன்றை யும் தனித்தனியாக தண்ணீரில் ஊறவைக்கவும். கருப்பட்டியை நீரில் கரைத்து வடிகட்டி கம்பிப்பாகாக காய்ச்சி ஏலக் காய்த்தூள் சேர்த்து வைக்க வும். ஊறிய தானியங்களில் இருந்து நீரை வடித்து எடுத்து நைஸாக அரைத்து வடிகட்டி, பால் எடுக்கவும் (அரைக்கும்போது புது நீரை சேர்த்து அரைக்கவும்). நெய்யை உருக்கவும்.

தானியங்களின் பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றிக் கிளறவும். கெட்டியானதும், கருப்பட்டிப் பாகைச் சேர்த்துக் கிளறி, உருக்கிய நெய் சேர்த்து நன்கு கிளறவும். அல்வா பதத்துக்கு வந்ததும் இறக்கவும்.

இந்த அல்வாவை துண்டுகளாக கட் செய்து, மேலே முந்திரி பதித்து பரிமாறலாம்.7 4

Related posts

கருப்பட்டி நெய்யப்பம்

nathan

மாலாடு

nathan

பிஸ்கட் சீஸ் சாட்

nathan

கோதுமை அல்வா

nathan

தித்திப்பான சேமியா கேசரி செய்வது எப்படி

nathan

அக்ரூட் சாக்லேட் ஃபட்ஜ்

nathan

பால் ரவா கேசரி

nathan

தெரளி கொழுக்கட்டை

nathan

சுகர் குக்கீஸ் வித் ஐஸிங்

nathan