31.9 C
Chennai
Friday, Mar 13, 2026
uJ9lW7V
மருத்துவ குறிப்பு

தலை அரிப்பை குணப்படுத்தும் மருத்துவம்

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய பொருட்கள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தலையில் உண்டாகும் அரிப்பை குணப்படுத்தும் மருத்துவத்தை பார்க்கலாம். இப்பிரச்னைக்கு ஆவாரம் பூ, அருகம்புல், பூண்டு, மஞ்சள் ஆகியவை மருந்தாகிறது. தலையின் மேல் உள்ள தோல் பகுதியில் ஏற்படும் அரிப்பு காரணமாக செதில் செதிலாக மாவுபோன்று கொட்டுகிற நிலை, ஈறு மற்றும் பேன்கள் உருவாவது, பொடுகு தொல்லை, இதை தொடர்ந்து உடலில் அரிப்பு, சொரி போன்றவை ஏற்படும். பொடுகினால் அரிப்பு உண்டாகும். சொரியாசிஸ் உடல் முழுவதும் வரக்கூடியது. குறிப்பாக, கைகால் மூட்டுகளில் வந்து துன்புறுத்தும். இப்பிரச்னைகளை தடுக்க ஆரம்பத்திலேயே மருந்து எடுத்துக்கொள்வது அவசியம்.

ஆவாரம் பூவை பயன்படுத்தி தலை அரிப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆவாரம் பூ, இலுப்பை எண்ணெய். செய்முறை: ஆவாரம் பூ பசையுடன் இலுப்பை எண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி இளஞ்சூடாக எடுத்து வாரம் இருமுறை தேய்த்து குளிப்பதால் தலையில் அரிப்பு, பொடுகு, சொரியாசிஸ் போன்றவை குணமாகும்.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட ஆவாரை சாலையோரங்களில் காணக்கூடியது. ஆண்டு முழுவதும் பூவோடு இருக்கும். தங்க நிறமுடைய பூக்களை கொண்டுள்ளது. அருகம்புல்லை பயன்படுத்தி தோல், தலையில் உண்டாகும் அரிப்பை குணமாக்கும் மருந்து தயாரிக்கலாம். அருகம்புல் சாறுடன் சிறிது மஞ்சள் பொடி, சித்தரத்தை பொடி சேர்த்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்தால் தலையில் ஏற்படும் அரிப்பு, பொடுகு தொல்லை நீங்கும்.

நல்லெண்ணெய்யை பயன்படுத்தி தலையில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் எடுக்கவும். இதனுடன் பூண்டு பற்களை லேசாக தட்டிபோடவும். வெண்மிளகு பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் தலையில் உண்டாகும் அரிப்பு, பொடுகு தொல்லை நீங்கும். உடலுக்கு தேய்த்து குளிப்பதால் அரிப்பு பிரச்னை நீங்கும்.தயிரை பயன்படுத்தி தலையில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். வெள்ளை மிளகு பொடி கால் ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து தலையில் மசாஜ் செய்து குளித்துவர அரிப்பு குணமாகும். தலையில் அரிப்பு ஏற்பட்டால், சிறிது உப்பு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கரைத்து தலையில் தேய்த்து குளித்தால் அரிப்பு இல்லாமல் போகும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு மாந்தம், வயிற்றுபோக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். முன்பெல்லாம் வயிற்று கோளாறு என்று வந்தால் ஓமம் தேனீர் பயன்படுத்துவார்கள். தற்போது மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகளைதான் உபயோகப்படுத்துகிறோம். ஓமம் கால் ஸ்பூன் எடுக்கவும். இதில், அரை டம்ளர் நீர் ஊற்றி அதை கால் பங்காக காய்ச்சவும். இதனுடன் தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்துவர வயிற்று வலி, வயிற்றுபோக்கு, மாந்தம், வாந்தி உள்ளிட்ட வயிற்று கோளாறுகள் குணமாகும்.uJ9lW7V

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த காளான் சாப்பிட்டா பெண்களுக்கு குழந்தை சீக்கிரம் உண்டாகுமாம்…

nathan

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!

nathan

இதமான, இனிமையான குட்டித் தூக்கம்… பலன்கள், பக்கவிளைவுகள்!

nathan

சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க என்ன செய்யலாம்?

nathan

இந்த அறிகுறிகள் வந்த பின்தான் ஹார்ட் அட்டாக் வருமாம்… ஜாக்கிரதையா இருங்க…!

nathan

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை எப்படி தடுக்கலாம்?

nathan

கவனம் தேவை! அடிக்கடி தொண்டையில் பிரச்சினையா?

nathan

ஸ்கேன் படங்கள்! கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை

nathan

இருமலை மூன்றே நாட்களில் குணமாக்க வேண்டுமா?கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan