23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
இனிப்பு வகைகள்

பூந்தி, லட்டு செய்முறை, எப்படி பூந்தி லட்டு செய்வது , லட்டு செய்முறை

Description:

 

index

பூந்தி, லட்டு செய்முறை ஒன்றன் பின் ஒன்றாக செய்வது எப்படி என்ற‌ புகைப்படங்கள் மூலம் உங்களுக்காக இதோ – உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த பூந்தி லட்டு செய்முறையை செய்து வைத்துக் கொண்டு பிறகும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை காலத்தில் என்னால் எந்தவிதமான‌ இனிப்பு அல்லது காரம் செய்முறையை செய்து பதிவு செய்ய முடியவில்லை. ஒரு சில குடும்பங்களின் பிரச்சினை என்னவென்றால், இந்த பண்டிகை காலத்தில் பிஸியாக பயணங்களை மேற்கொள்ள முடிவெடுத்து விடுகின்றனர். எனவே இனிப்புகள் தயாரிக்க நேரம் மற்றும் இடம் இருப்பதில்லை. எனவே நான் இந்த பூந்தி லட்டு செய்முறையை ஒரு சில நாட்களுக்கு முன்பே செய்து, இதை பதிவில் குடுத்துள்ளேன்.

இந்த லட்டு எல்லாம் பூந்தி லட்டு என்று அழைக்கப்படுகிறது, இந்த லட்டு மாவு கரண்டியில் எடுத்து, ஓட்டைக்கரண்டியின் மீது பரவலாக கடாயில் உள்ள எண்ணெயின் மீது ஊற்றப்பட்டு வறுக்கப்படுகிறது. இவை வட்ட வடிவில் சிறிய உருண்டைகளாக உள்ளதால் இவை பூந்தி என்று அழைக்கப்படுகிறது. (‘பூந்த்’ என்றால் இந்தியில் நீர்த்துளிகள் என்று பொருள்).
பூந்தி லட்டில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று மென்மையானது, மற்றொன்று கடினமான முறுகலான ஒன்றாகும் இந்த இரு லட்டுக்களுக்கும் செய்முறையில் சில வேறுபாடுகள் உள்ளன. அதாவது சர்க்கரை பாகின் நிலைத்தன்மையினை பொருத்து இரு விதமான பூந்தி லட்டுக்களை செய்யலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை மென்மையான பூந்தி லட்டு செய்முறையாகும்.
பூந்தி லட்டு செய்முறை மோத்திகூர் லட்டு செய்முறையை போன்றது. மாவின் நிலைத்தன்மை சரியாக இருந்தால் தான் பூந்தியானது உருண்டையாக வரும் என்பதை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களால் பூந்தி லட்டு செய்யும் கரண்டியால் இதை நன்றாக செய்ய முடியும் என்றால், நீங்கள் பூந்தி கரண்டியை வைத்தும் இதை செய்யலாம். (பூந்தி செய்வதற்கென்றே தனியாக கரண்டி உள்ளது).
நீங்கள் இதற்கு ஒரு வழக்கமான துளை கரண்டியை பயன்படுத்தினால் மட்டும் உருண்டையாக பூந்தியை செய்ய முடியாது. நீங்கள் இந்த மாவை கரண்டியில் பரவலாக விடும் போது முதல் தடவை நல்ல உருண்டையாக பூந்தி வரும், ஆனால் நீங்கள் தொடர்ந்து தேய்த்துக் கொண்டே இருந்தால் (துளை கரண்டியில்) உருண்டையாக பூந்தி வராது. அதனாலதான் நான் சொல்கிறேன் இதை செய்வது சிறிது கடினமானது மற்றும் இதை செய்வதற்கு நிச்சயம் பொறுமை வேண்டும். :-)
உருண்டையாகவோ அல்லது உருண்டையாக இல்லாமலோ இருக்கலாம், ஆனால் இந்த பூந்தியின் ருசியால் இவை சீக்கிரத்தில் முடிந்துவிடும். இதை காற்றுப் புகாத ஜாடியில் வைத்து பயன் படுத்தலாம். இதை செய்த பின் ஒரு சில நாட்களுக்கும் இதை வைத்து இருந்து பயன்படுத்தலாம். இதை குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒரு வாரம் வரை உபயோகிக்கலாம். நீங்கள் எண்ணெய்க்கு பதிலாக நெய் பயன்படுத்தியும் பூந்தி செய்யலாம்.
நான் விநாயகர் சதுர்த்திக்கு நைவேத்தியமாக இதை நாளைக்கு செய்ய திட்டமிட்டுள்ளேன், முடிந்தால் இதை பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளோம். நான் விநாயகரிடம் இதை செய்வதற்கு சக்தியையும், கற்பனை வளத்தினையும் தருவதற்கு வேண்டிக் கொள்கிறேன். ஒரு மகிழ்ச்சியான இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், அனைத்து தரப்பினருக்கும் அமைதி, செழிப்பு, ஞானம் அளிக்க  விநாயகர் அனைவருக்கும் அருள் புரியட்டும்.
நீங்கள் மேலும் பல வகையான இந்த லட்டு வகைகளை பண்டிகை காலத்தில் முயற்சி செய்து பார்க்கலாம் – தேங்காய் லட்டு, கடலை மாவு லட்டு, உலர்ந்த பழங்கள் லட்டு, மா லட்டு, ஜவ்வரிசி லட்டு.
பூந்தி லட்டுவை ஒன்றன் பின் ஒன்றாக செய்து பார்ப்பது எப்படி என்று கீழே தரப்பட்டுள்ளது.
1. ஒரு கிண்ணத்தில் பூந்தி லட்டு மாவிற்கான‌ அனைத்து உலர் பொருட்கள் எடுத்து கொள்ளவும்- அதாவது, கடலை மாவு மற்றும் குங்குமப்பூ தூள்.
2. ஒரு மென்மையான மாவாக செய்ய தண்ணீர் சேர்த்டு கல‌க்கவும். மாவின் நிலைத்தன்மை மிக‌ முக்கியமானது. நிலைத்தன்மையை சோதித்து பார்க்க ஒரு சில பூந்தியை வறுத்து பார்க்கவும். கடலை மாவின் தரத்தை பொறுத்தது தேவையான அளவு நீரை சேர்க்கவும்.
3. ஒரு கரண்டி கம்பி அல்லது ஒரு சிறிய ஸ்பூன் மூலம் இந்த மாவை சிறிதளவு எண்ணெயில் விட்டு சோதித்து பார்க்கலாம்.
4. பூந்தி ஒரு வட்ட வடிவில் இருக்க வேண்டும். இவை தட்டையாக‌ இருந்தால், மாவானது மெல்லியதாகவும் மற்றும் இந்த பூந்தி வால் முனைகளிலும் இருந்தால், மாவானது கெட்டியாகவும் இருக்கிறது என்றும் அர்த்தம். எனவே நிலைத்தன்மையை சோதித்து பார்க்க ஒரு சில பூந்தியை வறுத்து எடுத்து சரி பார்க்கவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிதளவு நீரை சேர்க்கவும், பின் நிலைத்தன்மையை சோதித்து பார்க்க ஒரு சில பூந்தியை வறுத்து எடுத்து சரி பார்க்கவும். இதே மாவு மெல்லியதாக இருந்தால் சிறிதளவு கடலை மாவு சேர்த்து, நிலைத்தன்மையை சோதித்து பார்க்க ஒரு சில பூந்தியை வறுத்து எடுத்து சரி பார்க்கவும். இதே மாதிரி செய்து பார்த்து பூந்தியை போடவும்.
5. இதற்கிடையில், ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீரை கலந்து கொள்ளவும்.
6. இந்த சர்க்கரை பாகை குறைந்த வெப்பத்தில் அடுப்பு மேல் வைக்கவும்.
7. இந்த சர்க்கரை பாகை விரலில் ஒட்டும் பதத்திற்கு பதமாக காய்ச்சவும். பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். இதை ஒரு பக்கமாக வைக்கவும். சர்க்கரை பாகு சூடாக இருக்கும் போது மட்டுமே நீங்கள் பூந்தியை இதில் சேர்க்க வேண்டும், எனவே இந்த சர்க்கரை பாகை சூடாக வைத்து இருக்க ஒரு பாத்திரத்தில் சூடான நீரை எடுத்துக் கொண்டு, இந்த சர்க்கரை பாகு பாத்திரத்தை அதில் வைத்துக் கொள்ளவும். சர்க்கரை பாகு பூந்தி போட்டு முடிக்கும் வரை சூடாக வைத்திருக்க வேண்டும்.
8. நீங்கள் பூந்தியை செய்து கொண்டே, சர்க்கரை பாகை காய்ச்சலாம், இப்படிதான் நான் செய்வேன். ஒரு ஓட்டை கரண்டியை எடுத்து சூடான எண்ணெய் மேலே வைக்கவும். மிகவும் அதிக உயரத்தில் வைக்க கூடாது, அப்படி வைத்தால் பூந்தி வட்ட வடிவில் இருக்காது, எனவே சரியான உயரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
9. ஒரு ஸ்பூனில் மாவை எடுத்து, ஓட்டை கரண்டி மீது ஊற்றவும்.
10. இந்த ஸ்பூனின் உதவியால் மாவை நன்கு லேசாக பரவலாக தடவி விடவும், இதே வழியில் மேலும் மாவை எடுத்து தேவையான அளவு செய்யவும்.
11. பூந்தியை நன்கு வேகும் வரை வதக்கவும். அதிகமாக வதக்கவோ முறுகலாகவோ செய்ய கூடாது. எண்ணெய் சத்தம் அடங்கியவுடன் பூந்தியை எடுத்து விடவும். இந்த படி மிகவும் முக்கியமானது, பூந்தி முறுகலாகி விட்டால், லட்டு மென்மையாக வராது. மேலும் சர்க்கரை பாகையும் நன்கு உறிஞ்சாது. ஏனவே இந்த நடவடிக்கை மிக முக்கியம்.
12. ஒவ்வொரு தடவி மாவை ஊற்றிய பின்பும், இரண்டு பக்கங்களிலும் இருந்து மெல்லிய பருத்தி துண்டுகளை கொண்டு துடைத்து விடவும்.
13. ஒரு துளையிட்ட கரண்டியால் பூந்தியை நன்கு வடித்து விட்டு, சூடான சர்க்கரை பாகில் போடவும். இதே மாதிரி எல்லா பூந்திகளையும் போடு சர்க்கரை பாகில் சேர்க்கவும்.
14. இறுதியாக முலாம்பழ விதைகள் (மகாஸ்), ஏலக்காய் தூள், கருப்பு ஏலக்காய் விதைகள் மற்றும் பச்சை கற்பூரம் (விரும்பினால்) ஒரு சிட்டிகை சேர்க்கவும். மேலும், நெய் சேர்க்கவும். நெய் லட்டை நன்கு உருண்டையாக பிடிக்க உதவுகிறது. நான் பின்னர் ¾ டீஸ்பூன் நெய் சேர்த்தேன்.
13. இவற்றை எல்லாம் நன்கு கலந்து பூந்தியை லட்டுவாக பிடிக்கவும்.
14. நீங்கள் இந்த பூந்தி லட்டுவை ஒரு சிறிய மப்பின் காகிதத்தில் வைத்து அழகு படுத்தலாம். நிங்கள் இந்த பூந்தி லடு மீது திராட்சையும் அல்லது முந்திரி கொண்டு அழகுபடுத்த முடியும். இதை விநாயகருக்கு நைவேத்தியமாகவும் அல்லது பிரசாதமாகவும் இதை செய்யலாம்.
குறிப்பு: நீங்கள் தெய்வங்களும் எந்தவித‌ உணவு செய்ய வேண்டும் என்றால், ருசி பார்க்காமல் அல்லது அதன் மணத்தினை கொண்டே செய்யலாம். மேலும், நம் மனதில் பக்தி, தூய்மை மற்றும் அமைதியான மன நிலையே போதும்.

Related posts

மைசூர்பாகு

nathan

தீபாவளி ஸ்பெஷல்: கம்பு முறுக்கு

nathan

சத்தான பீட்ருட் ஹல்வா.!!

nathan

தித்திப்பான ரவை – தேங்காய் உருண்டை

nathan

காரட்அல்வா /Carrot Halwa

nathan

இனிப்பு பூந்தியுடன் தீபாவளியை கொண்டாடுங்கள்……..

sangika

தீபாவளி ஸ்பெஷலாக சுவையான சோன்பப்டி

nathan

சுவையான பானி பூரி

nathan

சுகர் குக்கீஸ் வித் ஐஸிங்

nathan