28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
14 1439530723 4 banana
ஆரோக்கிய உணவு

12 நாட்கள் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டு நம்ப முடியாத வகையில் மாறிய அதிசய பெண்!

வாழைப்பழம் ஆரோக்கியமானது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியம் குறைவாகவும் உள்ளதால், இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளடங்கியுள்ளது. பொதுவாக வாழைப்பழத்தை அனைவருமே சாப்பிடலாம். நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் கூட எவ்வித அச்சமும் இல்லாமல் வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

இத்தகைய வாழைப்பழத்தின் நன்மைகளைப் புரிந்து கொண்ட யூலியா என்னும் பெண்மணி, வாழைப்பழத்தை மட்டும் தொடர்ந்து 12 நாட்கள் சாப்பிட முடிவெடுத்தார். இந்த 12 நாட்களும் நன்கு கனிந்த வாழைப்பழத்தை மட்டும் உண்டு வந்தார். அதோடு தண்ணீர் அதிகம் குடித்து, உடற்பயிற்சியை மேற்கொண்டு, நன்கு ஓய்வும் எடுத்தார்.

இதனால் அவர் தன் உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையைக் குறைத்து சிக்கென்று மாறியுள்ளார். அதுமட்டுமின்றி, இன்னும் வேறு சில மாற்றங்களையும் உணர்ந்தார். சரி, இப்போது 12 நாட்கள் தொடர்ந்து வெறும் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டு வந்த பெண்மணி, தன் உடலில் என்ன மாற்றங்களை உணர்ந்தால் என்று பார்ப்போம்.

வயிற்று பிரச்சனைகள் இல்லை வாழைப்பழங்களை மட்டும் உட்கொண்டு வந்த யூலியா முதலில் செரிமானம் சீராக நடைபெறுவதை உணர்ந்தாராம். இதுவரை செரிமான பிரச்சனைகளை சந்தித்த இவர் வாழைப்பழ டயட்டை மேற்கொண்ட பின் செரிமானம் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படுவதை நன்கு உணர முடிந்ததாம். இதற்கு வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து தான் காரணம்.

ரிலாக்ஸ் வாழைப்பழ டயட்டை மேற்கொண்ட பின் மனம் நன்கு அமைதியாகவும், ரிலாக்ஸாகவும் இருப்பதை உணர்ந்திருக்கிறார். அதுமட்டுமின்றி நிறைய படைப்பாற்றல் அதிகரித்திருப்பதையும் உணர்ந்தாராம். மேலும் எதிலும் நன்கு கவனத்தை செலுத்த முடிந்ததாம். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ட்ரிப்டோஃபேன் தான் முக்கிய காரணம். இவையே உடலில் உள்ள செல்கள் சீராக தொடர்பு கொள்ளவும், மூளையில் சரியான ஆக்ஸிஜன் அளவை பராமரிக்கவும் உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவு வாழைப்பழ டயட்டை மேற்கொள்ளும் முன் இருந்த உயர் இரத்த சர்க்கரை அளவானது, இந்த டயட்டை மேற்கொண்ட பின் சரியான அளவில் இருந்ததாம்.

உடலின் ஆற்றல் இதுவரை சோர்வை சந்தித்த இவர், வாழைப்பழ டயட்டை பின்பற்றும் போது மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பதை உணர நேர்ந்ததாம்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் இதுவரை இருந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் பிரச்சனையானது, வாழைப்பழ டயட்டை பின்பற்றும் போது இல்லை என்பதை நன்கு உணர முடிந்ததாம்.

கருத்தரித்தல் பல வருடங்களாக யூலியாவால் கருத்தரிக்க முடியாமல் இருந்தது. ஆனால் இந்த வாழைப்பழ டயட்டைப் பின்பற்றியதால், கருத்தரிப்பதில் இருந்த பிரச்சனை நீங்கி, ஓர் அழகான குழந்தையை பெற்றெடுக்க முடிந்ததாம்.

எடை குறைவு வாழைப்பழ டயட்டை பின்பற்றியதன் விளைவாக, இவரது உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிந்ததோடு, உடலில் இதுவரை இருந்த பிரச்சனை நீக்கி ஆரோக்கியமாக இருப்பதை உணர முடிந்ததாம்.

குறிப்பு வாழைப்பழ டயட் அனைவருக்குமே பொருந்தாது. குறிப்பாக தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த டயட் சரியானது அல்ல. எனவே இந்த டயட்டை மேற்கொள்ளும் முன், மருத்துவரிடம் கலந்தாலோசித்து பின் ஆரம்பியுங்கள்.

14 1439530723 4 banana

Related posts

நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் பூசணி விதைகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! இடுப்பு எலும்பு வலுப்பெற உளுந்துக் களி

nathan

சுவையான முட்டைக்கோஸ் சாம்பார்

nathan

சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற சூப்பர் டிப்ஸ்

nathan

உங்க வீட்ல இந்த தண்ணி தான் வாங்குறீங்களா?… உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

சியா விதை சாப்பிடும் முறை

nathan

கொழுப்பை குறைக்கும் வாழைப்பூ சீரகக் கஞ்சி

nathan

தெரிந்துகொள்வோமா? இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பூண்டை எவ்வாறு எடுத்தக்கொள்ள வேண்டும்? தெரிஞ்சிக்கங்க…

nathan