27.3 C
Chennai
Thursday, Aug 14, 2025
sl4453
சிற்றுண்டி வகைகள்

போளி

என்னென்ன தேவை?

மைதா மாவு – 1 கப்,
உப்பு – 1 சிட்டிகை,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,

பூரணத்திற்கு…

கடலைப் பருப்பு – 1/2 கப்,
பொடித்த வெல்லம் – 1 கப்,
துருவிய தேங்காய் – 1/4 கப்,
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்,
தண்ணீர் – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

மைதா மாவில், மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி சிறிது தளர்வாக சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். 6 முதல் 8 மணி நேரம் வரை இதை சிறிது எண்ணெய் ஊற்றி ஊற வைக்கவும்.

பூரணம் செய்ய…

கடலைப் பருப்பை வாசனை வரும் வரை இளஞ்சூட்டில் வறுத்து, பின் நீரில் கழுவி, 3 முதல் 4 விசில் வரை பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். பின் பருப்பை ஆற வைத்து, வெல்லம், தேங்காய், ஏலக்காய் தூள் சேர்த்து அரைக்கவும். அரைத்த பூரணத்தை, சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.எண்ணெய் தடவிய வாழை இலையின் மீது, மைதா மாவை சிறிய வடை போல் தட்டி, நடுவில் பூரண உருண்டையை வைத்து, எல்லா விளிம்புகளையும் பூரணத்தின் மேல் மூடி, கையால் தட்டி சப்பாத்தி போல் பெரிதாக்கி, சூடான தோசைக் கல்லில் இட்டு இரண்டு புறமும், நெய் விட்டு வேக வைக்கவும்.சுவையான போளி தயார். sl4453

Related posts

வெரைட்டியாக ருசிக்க… 30 வகை உருளைக்கிழங்கு சமையல்

nathan

சூப்பரான சிக்கன் – உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

பீட்ரூட் பக்கோடா

nathan

10 நிமிடத்தில் செய்யலாம் சுவையான ஸ்நாக்ஸ்

nathan

பூரி ஸ்வீட் ரோல்ஸ்

nathan

பனீர் குடைமிளகாய் பராத்தா

nathan

சத்தான கோதுமை ஓட்ஸ் ஊத்தப்பம்

nathan

சுவையான சரவண பவன் கைமா இட்லி

nathan

தினை சீரக தோசை

nathan