24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
E0AE95E0AEB0E0AF81E0AEAAE0AF8DE0AEAAE0AE9FE0AF8DE0AE9FE0AEBF 2 12566
ஆரோக்கிய உணவு

நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினல்தானா..?

பனைமரத்திலிருந்து எடுக்கப்படும் பதனீரைக் காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்ற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதை பனைவெல்லம், கருப்புக்கட்டி, பனைஅட்டு, பானாட்டு என்றும் சொல்வார்கள்.

கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து, உடலை சுறுசுறுப்பாக்குவதோடு, மேனி பளபளக்கவும் வைக்கும். பெண்கள் பூப்பெய்திய நேரத்தில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும், இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பபையை வலுப்பெறவும் செய்யும் ஆற்றல் கொண்டது கருப்பட்டி.
காபியில் சர்க்கரைக்குப் பதிலாக, கருப்பட்டி போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும், கிராமங்களில் கருப்பட்டிக்காபி குடிக்கும் பழக்கும் இன்றும் உள்ளது. இதனாலதான் சர்க்கரை நோயாளிகளும் கருப்பட்டிக்காபி குடித்து வருகிறார்கள்.

இதன் நிழலாகத்தான் தற்போது பரவிக் கிடக்கும் இயற்கை உணவங்களிலும் கருப்பட்டிக்காபி வாசனை பரவ ஆரம்பித்திருக்கிறது. இது தவிர கருப்பட்டி அல்வா, கருப்பட்டி பணியாரம், கருப்பட்டி பால்கோவா, கருப்பட்டி களி என நீண்டு கொண்டே போகும். கருப்பட்டி கலந்த பதார்த்தங்களில் கலந்திருப்பது உண்மையான கருப்பட்டிதானா..? நாம் கடைகளில் வாங்கும் கருப்பட்டியும் உண்மையான கருப்பட்டிதானா..?
%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF (2) 12566
ஒரிஜினல் கருப்பட்டி எது? போலி கருப்பட்டி எது என்பதை எளிதில் அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி என்பதைப் பற்றி கூறுகிறார், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தேரிக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த, கருப்பட்டி காய்ச்சும் தொழிலில் 20 வருடம் அனுபவமுள்ள மகாராஜா.

MAHARAJA VALATHUKAIYIL ORIGINAL KARUPPATTI , IDATHUKAIYIL SEENI KARUPPATTI 12378
மகாராஜா வலது கையில் ஒரிஜினல் கருப்பட்டி, இடது கையில் போலி கருப்பட்டி

* கருப்பட்டியை அல்லது கருப்பட்டித் துண்டைக் கடித்து மெல்லும் போது, அதன் சுவை கரிப்புத்தன்மையுடன் கூடிய இனிப்புச்சுவையாக இருந்தால், அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி. அதே நேரத்தில் கருப்பட்டியை மெல்லும் போது, வாசனையில்லாமல், சர்க்கரையின் இனிப்புச்சுவை மட்டும் உணர முடிந்தால் அது போலி கருப்பட்டி.

* முழுக்கருப்பட்டியை உடைத்துப் பார்த்தால் கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும்.

* கடைகளில் வாங்கி வீட்டில் வைத்திருக்கும் கருப்பட்டி சில நாட்களில், சில வாரங்களில் அதனுடைய கெட்டித்தன்மையில் இருந்து இளக ஆரம்பித்தால் அது போலி. கல்லு போன்று அதன் தன்மை மாறாமல் இருந்தால், அது ஒரிஜினல் கருப்பட்டி.

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF (1) 12132
கலப்படமில்லாத கருப்பட்டி

* கருப்பட்டியை கையில் எடுத்து உற்றுப்பார்த்தால் பளபளப்பில்லாமல் இருந்தால் அது ஒரிஜினல். அதுவே, கருப்பட்டியின் மேல் மைதா மாவு போல, தொட்டால் கையில் வெள்ளையாக ஒட்டினால் அது போலி.

* வயது முதிர்ந்த கிராமத்து ஆட்கள் கருப்பட்டியின் அடிப்பாகத்தை நுகர்ந்து பார்த்து அதன் மணத்தை வைத்து ஒரிஜினலா, போலியா என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்.

* தேங்காயைத் தட்டிப்பார்ப்பது போல, கருப்பட்டியின் அடிப்பாகத்தை தரையில் தட்டிப் பார்க்கவும். சத்தம் மிதமாகக் கேட்டால் அது ஒரிஜினல். சத்தம் அதிகமாகக் கேட்டால் அது போலி கருப்பட்டி.

* ஒரு டம்ளர் தண்ணீரில் சின்னக் கருப்பட்டிதுண்டைப் போட்டால், அது முழுவதுமாக கரைய ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகும். ஆனால் போலி கருப்பட்டி, அரை மணி நேரத்திலேயே கரைந்துவிடும்.

* நாள்பட்ட கருப்பட்டியின் மேல்புறம் புள்ளிப் புள்ளியாக மாறும். பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால்தான் இந்த மாற்றம். ஆனால், போலி கருப்பட்டியில் புள்ளி வராது.

* கருப்பட்டி வாங்கும்போது தட்டிப்பார்த்தும், நுகர்ந்தும் கண்டுபிடிக்க முடியாவிட்டால், சிறு துண்டை உடைத்து வாயில் போட்டு மென்று பாருங்கள். கரிப்புத்தன்மையுடன் கூடிய இனிப்புச்சுவையில் நிச்சயம் கண்டுபிடித்து விடலாம்.

போலிக்கான காரணங்கள்:

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF (2) 12179
சர்க்கரைப் பாகு கலந்த போலி கருப்பட்டி

ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் முழுமையாகவும், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளிலும் பனைமரங்கள் இருந்தது. ஆனால், தற்போது பனைமரத்தின் அளவு கால்வாசியாகக் குறைந்துவிட்டது. அதே சமயம் வருடத்தில் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய 6 மாதம் மட்டுமே பதனீர் கிடைக்கும். இதில் தை, மாசி பதனீர் உற்பத்தி தொடங்கும் மாதங்கள். பங்குனி, சித்திரை உற்பத்தி உச்சத்திலிருக்கும். வைகாசி, ஆனி உற்பத்தி முடியும் மாதங்கள். ஆனால், கருப்பட்டி, பனங்கற்கண்டு, சில்லுக் கருப்பட்டிகளின் தேவை வருசம் முழுக்க இருந்துக்கிட்டே இருக்கு. தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துலயும், வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கத்துலயும் கடந்த 10 வருசமா கருப்பட்டி தொழிலில் போலிகள் அதிகம் உருவாகிவிட்டது.

கருப்பட்டி காய்ச்சப் பயன்படும் தாச்சுவில் (இரும்பிலான வட்டவடிவினான பாத்திரம்) 15 லிட்டர் பதநீரை ஊற்றி, ஒன்றரை முதல் ரெண்டு மணி நேரம் வரை கிளறி இறக்கி சிரட்டைகளில் ஊற்றினால் 3 கிலோ கருப்பட்டிதான் கிடைக்கும். அதனால்தான் சர்க்கரை நிறைந்த போலி கருப்பட்டிகள் நம்மை கவர்ந்திழுக்கிறது.

சர்க்கரைப் பாகு கலந்த போலி கருப்பட்டி
%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4 %E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF %E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF 12149
கருப்பட்டி என்கிற பெயரில் சர்க்கரை கலந்து விற்கப்படுவதை எல்லாம் வாங்கி நம் உடலை சர்க்கரைக்கு பலியாக்குவானேன்? ஒர்ஜினலை இனி தேடிப்பிடித்து வாங்குங்கள்.

Related posts

உணவு நல்லது வேண்டும்!

nathan

ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம்

sangika

உடல் பலம் பெற சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

நார்ச்சத்து, வைட்டமின், புரோட்டின் இல்லாத மைதா மாவு

nathan

உடலில் கொழுப்புகளை கரைக்கும் பாசிப்பயறு!…

nathan

இரவு நேரத்தில் தெரியாம கூட மாம்பழத்தை சாப்பிடாதீங்க..

nathan

டயட்டில் இருப்போர் அதிகம் பயன்படுத்தும் ஓட்ஸ் கொழுக்கட்டை

nathan

எப்படி சாம்பார் செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா?

nathan

டயாபடீக் டிரிங்க்… ஹேர் கண்டிஷனர்… பலவித பலன்கள் தரும் வெண்டைக்காய்!

nathan