29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
04 1441364973 2weightlossbenefitswithmosambijuice
எடை குறைய

சாத்துக்குடி ஜூஸ் குடித்து உடல் எடையை குறைப்பது எப்படி???

இன்றைய நிலையில் உடல் பருமன் தான் பெரும்பாலானவர்களின் பெரும் தலைவலியாக இருக்கிறது. உடற்பயிற்சி, தீவிரமான டயட் என பலவற்றை பின்பற்றியும் உடல் எடை குறையாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஆனால், தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகுவதால் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும் என பலருக்கும் தெரிவதில்லை. ஏனெனில், சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால், பசியை கட்டுப்படுத்த முடியும், இதில் இருக்கும் அமில சத்து கொழுப்பை விரைவாக கரைக்க உதவுகிறது.

இது போன்ற சாத்துக்குடி ஜூஸின் பயன்கள், உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது….

பசியை போக்கும் சாத்துக்குடி ஜூஸில் இருக்கும் சிட்ரிக் அமிலம் பசியை கட்டுப்படுத்த உதவும். பசிக்கும் போது உணவு சாப்பிடுவதை தவிர்த்து சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால் சீரான முறையில் உடல் எடையை குறைக்க முடியும்.

கலோரிகள் குறைவு சாத்துக்குடி ஜூஸில் கலோரிகள் குறைவு. இதனால் வீண் கொழுப்பு உடலில் ஏறாது. குறைவான கலோரிகளால் பசியையும் போக்குவதால் உடல் எடை அதிகமாகாமல் இருக்க பயனளிக்கிறது சாத்துக்குடி ஜூஸ்.

ஊட்டச்சத்து நிறைந்தது உடல் சக்தியை அதிகரிப்பதுமின்றி. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது சாத்துக்குடி ஜூஸ். இதில், பொட்டாசியம், இரும்பு, கால்சியம், வைட்டமின் சி, புரதம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.

நச்சுக்களை அழிக்கும் அமில தன்மை உள்ளதால், உடலில் உள்ள நச்சுக்களை அழிக்கும் தன்மையுடையதாக திகழ்கிறது சாத்துக்குடி ஜூஸ். உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை அழித்து, உடல் பாகங்களின் செயலாற்றலை ஊக்குவிக்கிறது. கொழுப்பை கரைத்து, உடல் எடை குறைய பயனளிக்கிறது சாத்துக்குடி ஜூஸ்.

கொழுப்பின் அளவு சாத்துக்குடி ஜூஸின் மிக முக்கியமான சிறப்பு என்னவெனில், இது உடலில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.

எவ்வாறு பருகுவது தினமும் காலை,சாத்துக்குடி ஜூஸுடன் தேனும், நீரும் கலந்து குடித்து வந்தால் உடல் எடையை விரைவில் குறைக்க முடியும் என்று கூறுகிறார்கள்.

04 1441364973 2weightlossbenefitswithmosambijuice

Related posts

உடல் எடையை குறைக்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ்

nathan

உடல் எடை குறைக்க இந்த கொடியிடை அழகிகள் என்ன செய்தார்கள் தெரியுமா?

nathan

சில நாட்களிலேயே பல மடங்கு நிறையை குறைக்க சிறந்த வழி!…

sangika

ஒரு மாதத்தில் தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

nathan

ஸ்லிம்மான இடைக்கு……

nathan

எளிதான இயற்கை முறையில் உடல் எடை குறைக்க:

nathan

உடல் எடையை எளிதாக குறைக்க கூடிய பொடி!….

sangika

கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும் கம்பு

nathan

உடல் எடையை குறைப்பதில் கைகொடுக்கும் மருத்துவக் குணம் நிறைந்த முட்டைகோஸ்!

nathan