29 C
Chennai
Saturday, Jun 29, 2024
14 1439546756 9tenvegetablesthatarebestwhenboiled
ஆரோக்கிய உணவு

இந்த உணவுகளை எல்லாம் வேக வைத்து தான் சாப்பிட வேண்டும்!!!

சில உணவுகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும், சில உணவுகளை மேலோட்டமாக வறுத்து சாப்பிடலாம், சில உணவுகளை அவித்தும், பொரித்தும் ருசிக்க வேண்டும். அப்போது தான் அதன் ருசி நாவிலும், உடலில் சத்துக்களும் நன்கு ஓட்டும்.

நமது முன்னோர்கள் அனைத்து உணவுகளையும் அவித்தும், பொரித்தும் சாப்பிட்டுவிடவில்லை. நாம் தான் ருசிக்காக அனைத்து உணவிலும் எண்ணெய்யை சேர்த்து, அதன் பயன் மற்றும் நலன் பற்றி தெரிந்துக் கொள்ளாமல், நாம் நினைத்த வண்ணம் சாப்பிட்டு வருகிறோம்.

இந்த வகையில், எந்தெந்த உணவை வேக வைத்து சாப்பிட வேண்டும்? அது ஏன்? என்று இனி பார்க்கலாம்…

கேரட்
கேரட்டை குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிடலாம். வேக வைத்த கேரட் தான் கண்களுக்கு நல்லது.

பீட்ரூட்
தினமும் ஓர் வேக வைத்த பீட்ரூட் சாப்பிடுவது இரத்த ஓட்டத்தை சீர்படுத்த உதவும். பீட்ரூட்டை அதிகபட்சம் மூன்று நிமிடங்கள் தான் வேக வைக்க வேண்டும், மறந்துவிட வேண்டாம்.

உருளைக்கிழங்கு
வேக வைத்த உருளைக்கிழங்கில் கலோரிகள் குறைவு. எனவே, இவ்வாறு சமைத்து சாப்பிடும் போது, உடல் எடை கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் கூட உருளைக்கிழங்கை சாப்பிடலாம்.

பீன்ஸ்
பீன்ஸ் காய்கறியை வேக வைத்து அதில் கொஞ்சம் உப்பு மற்றும் மிளகு சேர்த்து சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

பசலைக்கீரை
பச்சை காய்கறிகள் மற்றும் தாவர உணவுகளை வேக வைத்து சாப்பிடுவது தான் நல்லது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். வேக வைத்து சாப்பிடும் முறை தான் உடலுக்கு முழு சத்துகளையும் தருகிறது எனவும் கூறப்படுகிறது.

சோளம்
சோளத்தை வேக வைக்க நிறைய நீர் தேவை. மற்றும் இது வேக நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். இதிலிருக்கும் நார்ச்சத்துகள் உடலுக்கு அப்படியே போய் சேர வேண்டுமெனில் இதை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு
கிழங்கு உணவுகளிலேயே சர்க்கரைவள்ளி கிழங்கு உடல்நலத்திற்கு மிகவும் நன்மை விளைவிக்க கூடியது ஆகும். சர்க்கரை வள்ளியை வேக வைத்து சாப்பிடுவது உடல்நலனுக்கு நல்லது.

காலிஃப்ளவர்
பெரும்பாலானோர், காலிஃப்ளவரை குழம்பிலும், பொரியலாகவும் சமைத்து சாப்பிடவே விரும்புவர்கள். ஆனால், காலிஃப்ளவரை வேக வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமானது.

முட்டைக்கோஸ்
வேக வைத்து சாப்பிட வேண்டிய காய்கறிகளில் முட்டைக்கோஸ் மிக முக்கியமானது. முட்டைக்கோஸ் வேக வைத்து சாப்பிடும் போது தான் சுவையிலும் சரி, சத்துகளிலும் சரி, நல்ல பயன் தரும்.

ப்ராக்கோலி
ப்ராக்கோலி, வேக வைத்து சாப்பிடும் போது தான் மிகவும் சுவையாக இருக்கும். வெறுமென வேக வைக்காமல் உடன் கொஞ்சம் ஆலிவ் எண்ணெய் சேர்த்து வேக வைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும்.14 1439546756 9tenvegetablesthatarebestwhenboiled

Related posts

சுவையான சேமியா உப்புமா

nathan

ஃபுட் பாய்சன் இலிருந்து பாதுகாத்துக்கொள்ள இவைகளைச் செய்தாலே ? போதும் உணவு ஒவ்வொமை வராமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம். …

sangika

வெற்றிலையில் இவ்வளவு ரகசியம் ஒளிந்திருக்கிறதா ?அவசியம் படிக்க..

nathan

தேனின் பலன் உங்களுக்குத் தெரியுமா ?

nathan

கெட்ட கொழுப்பை குறைக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

மணம்.. குணம்.. ஆரோக்கியம்.. சக்தி தரும் கடுகு

nathan

ஆம்லெட் போடும் போது மஞ்சள் கருவின் நிறம் எவ்வாறு உள்ளது என பார்க்க வேண்டுமாம்….

sangika

சிறந்த மருந்து மாஇஞ்சி தெரியுமா?

nathan

தோலுக்கு மினுமினுப்பை தரும் சைவ உணவுகள்

nathan