27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
201701110900565426 Mint coriander rice SECVPF
சைவம்

சுவையான புதினா – கொத்தமல்லி சாதம்

வயிற்று கோளாறுகளுக்கு அடிக்கடி புதினா, கொத்தமல்லியை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று புதினா-கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான புதினா – கொத்தமல்லி சாதம்
தேவையான பொருட்கள் :

உதிரியாக வடித்த சாதம் – 1 கப்
புதினா – ஒரு கட்டு
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
புளி – நெல்லிக்காய் அளவு
மிளகாய்வற்றல் – 3
பூண்டு – 2 பல்லு
இஞ்சி – 1 துண்டு
உளுந்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
தேங்காய் – 4 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயம், உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

நல்லெண்ணய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு – 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
நிலக்கடலை அல்லது உடைத்த முந்திரி – 1 தேக்கரண்டி

செய்முறை :

* புதினா, கொத்தமல்லி இலைகளை நன்றாக மண் போக அலசி வைக்கவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து வாணலியில் எண்ணெய் விட்டு வெள்ளை உளுந்தம்பருப்பைச் சிவக்க வறுக்கவும்

* வறுத்த பருப்புடன் மிளகாய் வற்றல், பெருங்காயம், புளி, உப்பு, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கி அலசி வைத்துள்ள கொத்தமல்லி, புதினாவையும் சேர்த்து ஒரு சுற்று கிளறி விட்டு ஆற விடவும்.

* மிக்சியில் ஆறவைத்தவற்றை போட்டு அதனுடன் தேங்காய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்த பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும்

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த கலவையை போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை நீர் வற்றும் வரை வதக்கி இறக்கவும்.

* அடுத்து அதில் உடைத்த நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பையும் எண்ணெயில் வறுத்துக் கலக்கவும்.

* இறக்கிய கலவையில் உதிராக வடித்த சாதத்தை போட்டு கிளறவும்.

* சுவையான புதினா – கொத்தமல்லி சாதம் தயார்.

* இதற்கு இணையாக வெள்ளரிப்பச்சடி, அப்பளம், வடகம் பரிமாறலாம்.201701110900565426 Mint coriander rice SECVPF

Related posts

கிராமத்து மிளகு குழம்பு

nathan

பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

nathan

வெஜிடேபிள் தம் பிரியாணி

nathan

பட்டாணி பிரியாணி

nathan

ஆந்திரா புளியோகரே

nathan

சைனீஸ் ஃபிரைடு ரைஸ்

nathan

கப்பக்கறி

nathan

குழந்தைகளுக்கான காளான் மஞ்சூரியன் செய்வது எப்படி

nathan

வாழைக்காய் புட்டு ரெசிபி

nathan