29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201701110956020926 coriander leaves reduce cholesterol in the blood SECVPF
ஆரோக்கிய உணவு

இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் கொத்தமல்லி

கொத்தமல்லியில் உடலுக்கு தேவையான அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கொத்தமல்லியில் அடங்கியுள்ள பயன்கள் என்னவென்று விரிவாக பார்க்கலாம்.

இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் கொத்தமல்லி
கொத்தமல்லியில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.

* கொத்தமல்லியில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகை வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்க, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புக்களின் இயல்பான இயக்கத்துக்கு என்று பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின் இ இதில் நிறைவாக உள்ளது.

* செரிமானத்துக்கு உதவும் என்சைம்கள் சுரப்பதைத் தூண்டுவதைப்போல, இன்சுலின் சுரப்பையும் கொத்தமல்லி தூண்டுகிறது. இதன்மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது. எனவே, சர்க்கரை நோயைத் தவிர்க்க விரும்புகிறவர்கள், சர்க்கரை நோயாளிகள் கொத்தமல்லியைத் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.

* இதில் உள்ள வைட்டமின் ஏ, சி, பாஸ்பரஸ் உள்ளிட்ட தாது உப்புக்கள், அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்கள் பார்வைக் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. கண்ணில் ஏற்படக்கூடிய அதிகப்படியான அழுத்தத்தைப் போக்குகிறது. வயதாகும்போது ஏற்படக்கூடிய பார்வைக் குறைபாடுகளைத் தாமதப்படுத்துகிறது.

* கொத்தமல்லியைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமானப் பிரச்சனை பெரும் அளவுக்குக் குறைந்திருப்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. வாந்தி, குமட்டலைப் போக்கும். இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைப் போக்குகிறது.

* கொத்தமல்லியில் உள்ள ஒலியிக், பாமிடிக், ஸ்ட்டியரிக், அஸ்கார்பிக் அமிலங்கள் மற்றும் (வைட்டமின் சி) ஆகியவை ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறையச்செய்யும். ரத்தக்குழாயின் உட்சுவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனால், மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.201701110956020926 coriander leaves reduce cholesterol in the blood SECVPF

Related posts

தெரிஞ்சிக்கங்க… தினமும் ‘பிளாக் டீ’ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

nathan

முந்திரி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

அவதானம்! தாய்ப்பால் கொடுக்கும் போது இதை சாப்பிடாதீர்கள்.! குழந்தைக்கு ஏற்பட வாய்ப்பு .!

nathan

பிரக்டோஸ் மற்றும் மார்பக கேன்சர் வர வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது. அதுவும் பால் அதிகமாக அருந்தும்போது ஏற்படும்.

nathan

சுவையான உருளைக்கிழங்கு முறுக்கு

nathan

ஆண்களின் உடல் சக்தியை அதிகரிக்க உதவும் ஆறு வகையான தேநீர்!!!

nathan

சுவையான பன்னீர் பட்டர் மசாலா செய்ய…!

nathan

மெல்லிடை மேனிக்கு வெங்காயப் பச்சடி!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள் உண்மையாவே பலாப்பழம் கேன்சருக்கு நல்லதா?

nathan