25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sl4442
இனிப்பு வகைகள்

ஜிலேபி

என்னென்ன தேவை?

மைதா மாவு – 1 கப்,
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
கெட்டித் தயிர் – 3/4 கப்,
பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
எண்ணெய் – பொரிப்பதற்கு.

சர்க்கரைப் பாகிற்கு…

சர்க்கரை – 1 கப்,
தண்ணீர் – 1 கப்,
குங்குமப்பூ – சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சர்க்கரைப் பாகு செய்ய…

ஒரு பாத்திரத்தில், ஒரு கப் தண்ணீரில், சர்க்கரை இட்டு கரைந்த பின் குங்குமப்பூவை சேர்த்து, மிதமான தீயில் ஒரு கம்பிப் பதம் வரும் வரை சூடாக்கி, எலுமிச்சைச் சாறை சேர்க்கவும். எலுமிச்சைச் சாறு சர்க்கரைப் பாகு உறையாமல் தடுக்கும். பாகு சூடாக இருக்க வேண்டும்.

மைதா, சோள மாவு, பேக்கிங்சோடா, மஞ்சள் தூள் அனைத்தையும் நன்கு கலந்த பின், நெய், தயிர் சேர்த்து கெட்டியான மாவாக கரைத்துக் கொள்ளவும். மாவின் பதம் ஜிலேபி பிழிவதற்கு ஏற்றார் போல் இருக்க வேண்டியது அவசியம். 12 முதல் 24 மணி நேரம் வரை மாவை புளிக்க வைக்க வேண்டும். புளித்த மாவை, ஒரு கூம்பு வடிவ பிளாஸ்டிக் பையிலிட்டு சூடான எண்ணெயில் பொரித்து கம்பிப் பதம் உள்ள சர்க்கரைப் பாகில் இட்டு, அரை மணிநேரம் வரை வைத்திருந்து, பின்னர் பரிமாறலாம்.sl4442

Related posts

தீபாவளி ஸ்பெஷல்: கம்பு முறுக்கு

nathan

பால் பணியாரம்

nathan

சாக்லெட் மூஸ் (பிரான்ஸ்)

nathan

தீபாவளி ஸ்பெஷல் பாதுஷா.! எளிய முறையில் பாதுஷா எப்படி செய்வது

nathan

சாக்லேட் செய்வது எப்படி?

nathan

ரவா பர்ஃபி

nathan

பீட்ருட் வெல்ல அடை… பிரமாத சுவை! வாசகிகள் கைமணம்!!

nathan

தீபாவளி ரெசிபி வேர்க்கடலை லட்டு

nathan

பூந்தி லட்டு

nathan