29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201701090832221823 Parents need to take note of Child Upbringing SECVPF
ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தை வளர்ப்புமுறையில் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிவை

குழந்தை வளர்ப்பு வழிமுறைகளை மனதில் நிறுத்தி பெற்றோர்கள் செயல்பட்டால் நல்ல பண்புள்ள சிறந்த குழந்தைகளை இளம்வயதிலேயே உருவாக்கிவிடலாம்.

குழந்தை வளர்ப்புமுறையில் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிவை
சிறந்த பெற்றோராகத் திகழ்வதற்கு முக்கியமான சில வழிமுறைகளைப் பற்றி இவர்கள் தெரிந்துகொள்வது நல்லது. அனுபவத்தின் அடிப்படையில் பெரியோர்களும், ஆய்வாளர்களும் பல வழிமுறைகளை தெரிவிக்கிறார்கள். அவற்றுள் சில:

1. உங்கள் பிள்ளைகள் குழந்தைப்பருவத்தில் இருக்கும் போதே அவர்களிடம் அன்பு செலுத்த போதிய நேரம் ஒதுக்குங்கள்.

2. படிப்பின் முக்கியத்துவத்தை சிறு வயது முதலே உங்கள் குழந்தைகள் உணர்ந்துகொள்ளும்படி விரிவாக எடுத்துக் கூறுங்கள்.

3. உங்கள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் நடந்துகொள்ளுங்கள். அவர்களின் ‘சுய மதிப்பு’ (ஷிமீறீயீ Este-em) பாதிக்காத வகையில் உங்கள் செயல்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

4. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உங்கள் பிள்ளைகளைப் பாராட்டுங்கள். வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், பாராட்டுவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தி, மனம் திறந்து அவர்களைப் பாராட்டுங்கள். ஏனென்றால், பாராட்டப்படும் குழந்தை மனநிறைவோடும், உற்சாகத்துடனும் வளர்கிறது.

5. உங்கள் பிள்ளைகளை முடிந்த அளவு நம்புங்கள். நீங்கள் நம்புவதை அவர்கள் புரிந்துகொள்ளும்படியும் நடந்துகொள்ளுங்கள். நல்ல நம்பிக்கையோடு வளர்க்கப்படும் குழந்தை தன்னம்பிக்கையோடு (ஷிமீறீயீ Confidence) தங்கள் வாழ்வை தொடங்குகிறது.

6. உங்கள் குழந்தைகளின் திறமைகளை சிறுவயதிலேயே அடையாளம்கண்டு அந்தத் திறமைகளை சிறப்புத் திறமையாக (ஷிஜீமீநீவீணீறீ Sk-i-lls) மாற்றுவதற்கான பயிற்சிகளை வழங்குங்கள்.

7. பாராட்டு கிடைக்கும்போதும், ‘விமர்சனத் தாக்குதல்கள்’ நிகழும்போதும் ஒரே மனநிலையோடு ஏற்றுக்கொள்ளும் பண்பை உங்கள் குழந்தைகளிடம் உருவாக்குங்கள்.

8. சிறுவயதில் தங்களின் சின்னச்சின்ன செயல்களுக்கும் உங்களின் அங்கீகாரத்தை உங்கள் குழந்தைகள் எதிர்பார்ப்பார்கள். எனவே அவ்வப்போது, ‘நீ செய்வது சரிதான்’, ‘இதை இப்படிச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்’ என்னும் வழிகாட்டுதலுடன் கூடிய அங்கீகாரத்தை அவர்களுக்கு வழங்குங்கள்.

9. உங்கள் குழந்தைகள் தவறு செய்யும்வரை பார்த்துக் கொண்டு இருக்காதீர்கள். எப்போது தவறு நிகழ்கிறதோ, அப்போதே நாகரிகமான முறையில் சுட்டிக்காட்டவும் தயங்காதீர்கள்.

10. உங்கள் குழந்தை தவறு செய்யும்போதெல்லாம் கண்டும் காணாமல் விட்டுவிட்டு, பின்னர் ஒருநாளில் அத்தனை தவறுகளையும் பட்டியலிட்டு ஒரே நேரத்தில் சுட்டிக்காட்டினால் அந்தக் குழந்தைக்கு உங்கள்மேல் வெறுப்பு உண்டாகிவிடும். எனவே, எப்போது தவறான பாதையில் உங்கள் குழந்தை செல்கிறதோ, அப்போதே அதனை சுட்டிக்காட்டவும், திருத்தவும் தயங்காதீர்கள்.

11. உங்கள் குழந்தைகள் உங்கள்மேல் பாசம் வைப்பதைப்போலவே, நீங்கள் அவர்கள்மீது தேவையான அளவு பாசம் வையுங்கள். அளவுக்கு அதிகமான அன்பு சிலநேரங்களில் குழந்தைகளை தவறான வழியில் திசை திருப்பவும் வாய்ப்புள்ளது.

12. குழந்தைகள் கேட்பதையெல்லாம் கேட்டவுடன் வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை தவிர்த்துவிடுங்கள். குழந்தைகள் கேட்கும் பொருள் அவர்களுக்குத் தேவைதானா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து வாங்கிக் கொடுப்பது நல்லது.

13. உங்கள் குழந்தை சிறு தவறு செய்துவிட்டால் மிகப்பெரிய தண்டனையை கொடுத்து விடாதீர்கள். அந்தத் தவறை அவர்கள் உணர்ந்து திருந்துவதற்கான வாய்ப்பை வழங்குங்கள்.

14. இளம்வயதிலேயே உங்கள் பிள்ளைகளுக்கு லஞ்சம் கொடுத்து பழக்காதீர்கள். ‘நீ கடைக்குப்போய் பொருள் வாங்கி வந்தால் உனக்கு சாக்லேட் வாங்கித் தருவேன்’. ‘நீ அம்மாவோடு துணைக்குப்போனால் உனக்கு ஒரு சுடிதார் வாங்கித் தரச் சொல்வேன்’ என தேவையற்ற முறையில் பரிசுகள் வழங்கும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. சின்னச்சின்ன பரிசுகளுக்கு ஆசைப்படும் குழந்தைகளின் மனம், பரிசினைப் பெறுவதற்காகவே சில செயல்களை செய்யும். ஆனால், எப்போதும் பரிசுகளை எதிர்பார்த்து செயல்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டால், அது மோசமான எதிர்விளைவை உருவாக்கிவிடும் அல்லவா?

15. வீணான விவாதங்களை குழந்தைகளிடம் தவிர்த்துவிடுங்கள். அப்படியே விவாதம் ஏற்பட்டால், விவாதத்தின்போது தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால், உங்கள் வார்த்தைகளை பயன்படுத்தி உங்களுக்கு எதிராகவே அந்த வார்த்தையைத் திருப்பி உங்களுக்கு பதிலடி கொடுக்கவும் வாய்ப்புள்ளது.

16. உங்கள் குழந்தையின் கல்வியின்மீது அதிக கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் சென்று திரும்பியதும், பள்ளிப்பாடங்கள் பற்றிய விவரங்களைக் கேளுங்கள். முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்யவும் நேரம் ஒதுக்குங்கள்.

17. உங்கள் குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்துவது போலவே, பள்ளியில் உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளையும் அறிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள். முடிந்தால், மாதம் ஒருமுறை பள்ளிக்கு நேரில் சென்று, ஆசிரியர்களை சந்தித்து உங்கள் பிள்ளையின் குணநலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

18. வீட்டில் தினமும் ஒருவேளையாவது ஒரேநேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். சாப்பிடும்போதே அன்று நடந்த முக்கிய சம்பவங்கள், செய்திகள், அனுபவங்கள், டி.வி. தொடர்கள், இசை நிகழ்வுகள், பள்ளிப் பிரச்சினைகள், பள்ளியின் முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றை அசைபோட்டுக் கொள்வது நல்லது.

19. அடிக்கடி உங்கள் குழந்தைகளிடம் கோபப்படாதீர்கள். உங்கள் கோப உணர்வுகளை தாங்கும் இளைய இதயம் வலி தாங்காமல் துடிக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டால், அவர் களது படிப்பிலும், நடவடிக்கையிலும் பல்வேறு மாற்றங்கள் உருவாகிவிடும்.

20. பெரிய தண்டனையை வழங்கி, குழந்தைகளைப் பயப்பட வைத்துவிடாதீர்கள். பயந்துகொண்டே வளரும் குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையை (Complex) தங்கள் மனதில் தக்கவைத்து, தடம் மாறவும், தடுமாறவும் வாய்ப்புகள் உள்ளன.

இதுபோன்ற இன்னும் பல குழந்தை வளர்ப்பு வழிமுறைகளை மனதில் நிறுத்தி பெற்றோர்கள் செயல்பட்டால் நல்ல பண்புள்ள சிறந்த குழந்தைகளை இளம்வயதிலேயே உருவாக்கிவிடலாம்.

குழந்தைகள் இனிய குழந்தைகளாக மாறிவிட்டால், அவர்களின் இதயத்தில் மகிழ்ச்சி நிறையும். இனிய குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது அவர்கள் நல்ல மனிதர்களாக மாறுவார்கள்.

இளமையில் நலமாய் தொடங்கும் வாழ்க்கைப் பயணம்தான் ஒருவரை வயதான காலத்திலும் நிம்மதியாய் வாழ வைக்கிறது. முதுமையிலும் இளமையான எண்ணங்களை உருவாக்குகிறது. இனிமையை வாழ்க்கை முழுவதும் வழங்குகிறது.
201701090832221823 Parents need to take note of Child Upbringing SECVPF

Related posts

கை கால் குடைச்சல் வர காரணங்கள் தெரியுமா?

nathan

குழந்தையின் நடத்தையில் கவனம் கொள்வது அவசியம்…!

nathan

காலில் தங்க கொலுசு போடக்கூடாது – பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்கள் பெயர் D எழுத்தில் தொடங்குகிறதா? – தெரிந்து கொள்ளுங்கள்!

nathan

நீரிழிவு நோயாளிகள் அச்சமின்றி சாப்பிடும் கேழ்வரகு அவல்….தெரிஞ்சிக்கங்க…

nathan

Health tips.. வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்யும் அன்னாசிப்பழம்!

nathan

தெரிஞ்சிக்கங்க… இப்படித்தான் மனைவி அமைய வேண்டும்!

nathan

தெரிஞ்சிக்கங்க…பாத மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

nathan

எந்த திசையில் தலை வைத்து தூங்குவது நல்லது எனத் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan