எப்படிச் செய்வது?
பாசிப் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை நன்கு கழுவி 5 முதல் 6 மணி நேரம் வரை ஊறவைக்கவும். பின்னர் நீரில்லாமல் வடிகட்டி, தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழையை அரைத்த மாவுடன் சேர்த்து உப்பு, சிறிது தண்ணீர் விட்டு, உளுந்த வடை மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, போண்டா போன்று பொரிக்கவும். துருவிய முள்ளங்கியை, ராம் லட்டுவின் மேல் தூவி, பச்சை சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
Related posts
Click to comment