24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
p14c 13504
ஆரோக்கிய உணவு

பாக்கெட் உணவுகளைவிட மண் மணம் மாறா உணவுகள் ஏன் சிறந்தவை?

கீரை, காய்கறி, பழங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டுக்கே வரவைக்கிறோம். அந்தளவுக்கு டெக்னாலஜியில் முன்னேறி இருக்கிறோம். உடலில் நோய் என்று மருத்துவரிடம் சென்றால், `கீரை சாப்பிடுங்க’, `பழம் சாப்பிடுங்க’ என்றுதான் சொல்வாரே தவிர, ‘கடையில் விற்கும் நூடுல்ஸைச் சாப்பிடுங்க’ என்று சொல்ல மாட்டார். ஆரோக்கியம் வேண்டும், நோய் குணமாக வேண்டும் என்றால் நாம் நல்லுணவைத் தேடித்தான் செல்ல வேண்டும். அந்த நல்லுணவுகளை உற்பத்திசெய்யும் விவசாயிகளே நாம் வணங்கவேண்டிய முதற்கடவுள்.

சாப்பிடக் கூடாத உணவுகளுக்கே விளம்பரம் தேவைப்படுகிறது!

இயற்கை உருவாக்குவதும் மனிதன் உருவாக்குவதும்தான் உணவே தவிர, இயந்திரங்கள் உருவாக்குவது உணவல்ல. பதப்படுத்தப்படும் உணவுகளுக்குதான் அதிகமாக விளம்பரம் செய்யப்படுகிறது. உதாரணத்துக்கு, டெட்ராபேக் ஜூஸ், கேன் உணவுகள், பாக்கெட் உணவுகள்… இதுவே, மண்ணில் விளைகிற கீரைக்கோ, காய்கறிகளுக்கோ இப்படி ஏதாவது விளம்பரம் வருகிறதா? டெட்ராபேக் ஜூஸைவிட இளநீருக்குத்தான் சத்தும் அதிகம்; சுவையும் அதிகம். என்றைக்காவது இளநீருக்கு விளம்பரம் வந்து பார்த்திருக்கிறோமா நாம்?

கடையில் வாங்கும் பழங்களில், ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். இது இயற்கை. ஆனால், டெட்ராபேக்கில் வரும் ஜூஸ் அனைத்தும் ஒரே சுவையுடன் இருக்கின்றன. அது எப்படி? பழங்களின் சுவையோடு பன்னாட்டு நிறுவனங்கள் சேர்க்கும் இனிப்பூட்டிகளே அதற்குக் காரணம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஏன் தவிர்க்க வேண்டும்?

கொய்யாவோ, மாம்பழமோ வாங்குகிறோம். நான்கைந்து நாட்களிலேயே அதன் தோல் வறண்டுபோகும், கறுத்துப்போகும், அழுகியும் போகும். இதுதான் நமக்கான உணவே தவிர, வண்ண வண்ண பேக்குகளில் வரும் டப்பா உணவுகள் நோயை மட்டுமே தரக்கூடியவை.

உடலுக்கு ஊறுவிளைவிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்

இந்த டெட்ராபேக் ஜூஸ்களை குடித்து வந்தால், உடல் எடை அதிகரிக்கும்; ஒற்றைத் தலைவலி, தலைவலி, வயிற்றுவலி போன்ற பிரச்னைகளும் வரலாம். மேலும், இவை கெடாமல் இருக்க கெமிக்கல்களும் கலக்கப்படுகின்றன. ஓர் உணவு கெட்டுபோவதுதான் இயற்கை; கெடாமல் இருந்தால் அது நமக்கான உணவல்ல.

ஆரோக்கியம் காக்க… எதைத் தவிர்க்கலாம்… எதைச் சேர்க்கலாம்?

எள்ளு
காலை உணவுக்கு கேன் ஜூஸ்களைத் தவிர்த்து, பழச்சாறுகளைத் தயாரித்துச் சாப்பிடலாம். காற்றடைத்து விற்கப்படும் சிப்ஸ்களைத் தவிர்த்துவிட்டு, கடலை உருண்டை, எள்ளு உருண்டைகளைச் சாப்பிடலாம்.

சூப்பர்மார்க்கெட்களில் கிடைக்கும் காய்கறிகளைவிட, மார்கெட்டில் கிடைக்கும் காய்கறி, பழங்கள், கீரைகள் வாங்கிச் சாப்பிடுவது நல்லது.

`பளிச்’ வெள்ளைச் சர்க்கரை வேண்டாம். சத்தும் சுவையும் நிறைந்த கருப்பட்டி, வெல்லம், பனங்கற்கண்டு, தேன் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

டிரிப்ஸுக்கு பதிலாக இளநீரையே உடலில் ஏற்றுவார்கள். அந்தளவுக்கு சக்திமிக்க பானம்தான் இளநீர். இளநீரை அவ்வப்போது குடித்தாலே போதும், சருமம் முதல் குடல் வரை ஆரோக்கியம் காக்கும் சிறந்த பானம் அது.

மைதாவால் தயாரிக்கப்பட்ட கேக், பிஸ்கெட், குக்கீஸ்களைத் தவிர்த்துவிட்டு, சிறுதானிய லட்டு, கேழ்வரகு லட்டு, சிறுதானிய இனிப்புப் பலகாரங்களைச் சுவைக்கலாம்.

டி.வி-யில் விளம்பரப்படுத்தப்படும் உணவுகளுக்கு விடை கொடுத்துவிட்டு, நாம் வீட்டில் செய்யக்கூடிய முறுக்கு, அதிரசம் போன்ற பலகாரங்களைச் சாப்பிடுவது நல்லது.

இரண்டு நிமிடத்தில் தயாராகும் இன்ஸ்டன்ட் உணவுகளுக்கு பதிலாக, சத்துக்களை அள்ளித்தரும் சிவப்பு அவல் சமைத்துச் சாப்பிடவும்.

ஐஸ் டீ, கோல்டு டீக்கு பதிலாக, சுக்கு காபி, கடுங்காபி, மூலிகை டீ, கிரீன் டீ ஆகியவற்றைக் குடிக்கலாம்.

பீட்சாவும் பர்கரும் சாப்பிட்டே ஆகணும் என்ற தூண்டுதல் இருந்தால், அதை நீங்களே சமைத்துச் சாப்பிடுங்கள். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் சமையல் அறையில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களாகவே இருக்கட்டும்.

லேபிள்

எந்த பேக்டு உணவை வாங்கினாலும் சரி, அதன் லேபிளைப் படியுங்கள். அதில் சேர்க்கப்பட்ட பொருட்கள் உங்கள் வீட்டுச் சமையல் அறையில் இருக்கிறதா எனச் சிந்தியுங்கள். அதன் பிறகு, அந்தப் பொருட்களை வாங்க வேண்டுமா என முடிவுசெய்யுங்கள்.

கோலா பானங்களில் சேர்க்கக்கூடிய ஆஸ்பெர்டெம் (Aspartame) எனும் இனிப்பூட்டி, சர்க்கரையைவிட இருநூறு மடங்கு சுவையைத் தரக்கூடியதாம். இதை குடித்தால், நம் உடல் என்னவாகும் என்பதைச் சிந்தித்து செயல்படுவது நல்லது. கோலா பானங்களுக்குப் பதிலாக இளநீரைக் குடியுங்கள்; கரும்புச் சாற்றை அருந்துங்கள்.

சிறிதானியங்களைவிட சிறப்பான உணவாக நிச்சயம் ஓட்ஸ் இருக்காது. சர்க்கரைநோய், இதய நோய், கெட்டக் கொழுப்பு ஆகியவற்றை தடுக்கும் சக்தி சிறுதானியங்களுக்கு உண்டு.

சாக்லேட்டுக்கு பதிலாக, இஞ்சி மொரபா, பேரீச்சை, கருப்பட்டியைச் சுவைக்கலாம்.p14c 13504

Related posts

சிறுதானியத்தில் பெரும் பலன்கள்!

nathan

நீங்கள் நீண்ட ஆயுளை பெற வேண்டுமா?அப்ப இந்த ஒரு பானத்தை குடிங்க

nathan

ருசியான சத்தான வாழைப்பழ தோசை!

nathan

மரவள்ளி கிழங்கு நன்மைகள் – maravalli kilangu benefits

nathan

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தக்காளியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

nathan

கறுப்பு உளுந்து சுண்டல்

nathan

குளிர்காலத்தில் சூடாக இருக்க உதவும் உணவுகள்!

nathan

எச் சரிக்கை ! உயிருக்கு உலை வைக்கும் பிராய்லர் மீன்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் சோம்பேறித்தனம் வருமா? உருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாவது உண்மையா…பொய்யா?

nathan