தினமும் உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது குதிரைவாலி புலாவ் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
சுவையான சத்தான குதிரைவாலி புலாவ்
தேவையான பொருட்கள் :
குதிரைவாலி அரிசி – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2 (சிறியது)
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
ப.மிளகாய் விழுது – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா – அரை ஸ்பூன்
தேங்காய்ப்பால் – ஒரு கப்
கிராம்பு, ஏலக்காய், பட்டை – தலா 2
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் ஊறவைக்கவும்.
* தக்காயை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய் விட்டு கிராம்பு, ஏலக்காய், பட்டை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் இஞ்சிப் பூண்டு, பச்சைமிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கி விடவும்.
* அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய்த் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
* தேங்காய்ப்பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஊற வைத்த குதிரைவாலி அரிசியை சேர்க்கவும்.
* குக்கரின் மூடியை வைத்து மூடாமல் தட்டை வைத்து மூடி, 15 முதல் 20 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும். வெந்ததும் திறந்து ஒரு முறை கிளறி இறக்கவும்.
* தேவையெனில் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.
* சுவையான குதிரைவாலி புலாவ் தயார்.