27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
201701070857078124 Broccoli Soup for diabetes patients SECVPF
சூப் வகைகள்

நீரிழிவு நோயாளிகளுக்கான ப்ராக்கோலி சூப்

ப்ராக்கோலியைக் கொண்டு சூப் செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு ப்ராக்கோலி மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள்.

நீரிழிவு நோயாளிகளுக்கான ப்ராக்கோலி சூப்
தேவையான பொருட்கள் :

ப்ராக்கோலி – 1/2
பெரிய வெங்காயம் – 1
உருளைக்கிழங்கு – 1
பூண்டு – 4 பற்கள்
தண்ணீர் – 1/8 கப்
பால் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை :

* ப்ராக்கோலி, வெங்காயம், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ப்ராக்கோலியை சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்த, பின் அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, அதனை குக்கரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின் அதனுடன் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கி, அதில் உள்ள நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு குக்கரில் உள்ள அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, அத்துடன் தனியாக எடுத்து வைத்துள்ள நீரை ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

* கடைசியாக அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கிளறி இறக்கினால், ப்ராக்கோலி சூப் ரெடி!!! 201701070857078124 Broccoli Soup for diabetes patients SECVPF

Related posts

பசியை தூண்டும் சீரகம் – தனியா சூப்

nathan

பட்டாணி சூப்

nathan

காய்கறி சூப்

nathan

காலிஃளவர் சூப்

nathan

கேரட்  - இஞ்சி சூப்

nathan

வெள்ளரி சூப்

nathan

நீரிழிவு நோயை குணப்படுத்த இந்த சூப்பை குடித்தால் போதும்……

sangika

பார்லி லெண்டில்ஸ் சூப்

nathan

நாட்டுக்கோழி ரசம்

nathan