29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
blowing nose in tissue
மருத்துவ குறிப்பு

மூக்கிலிருந்து ரத்தப்பெருக்கு (Epistaxis)

எந்த வயதினர் என்றாலும் எதிர்பாராத விதமாக மூக்கிலிருந்து ரத்தம் கொட்டும் போது அதிர்ச்சியடைவார்கள். சிறுவர் சிறுமியரிடம் பரவலாக இந்நிலை காணப்படுகிறது. பருவப் பெண்களுக்கும் இப்பாதிப்பு இருக்கிறது.

சைனஸ் பாதிப்பு, மூக்கிலுள்ள பூந்தசைகளில் ஏற்பட்டுள்ள வறட்சி, விரிசல்கள், ரத்த நாளங்களில் பாதிப்பு, மூக்கில் அடிபடுதல் போன்ற காரணங்களாலும், மூக்கினுள் காய்ந்த ஒட்டியுள்ள பொறுக்குகளை கிள்ளி எடுப்பதாலும், கடுமையாக அழுத்திப் பிடித்து மூக்கைச் சிந்துவதாலும் மூக்கிலிருந்து ரத்தக் கசிவு ஏற்பட்டுவிடுகிறது. ரத்தமாகவோ ரத்தம் கலந்த சளியாகவோ வெளிவருகிறது. சிலருக்கு மூக்கினுள் ரத்தம் கட்டியாக உறைந்திருக்கும். சிரமப்பட்டு வெளியேற்றினால் அதைத் தொடர்ந்து ரத்தம் வரத் தொடங்கி விடும். மூக்கிலிருந்து ரத்தம் வழிதல் தொடர்ந்து நீடிக்குமானால் ரத்த அடர்த்தி குறைவு (Low Blood Volume) மற்றும் ரத்த சோகை (Anaemia) கடுமையான உடல் சோர்வு, மனச்சோர்வு போன்றவை ஏற்படும்.

ஹோமியோபதியில் இந்நிலைக்கு பல மருந்துகள் உள்ளன. குறிகள், காரணங்கள் அடிப்படையில் நபருக்கு நபர் மருந்துகள் மாறுபடும். ஆனால் இந்நிலையை முற்றிலும் குணப்படுத்தும் ஆற்றல் ஹோமியோபதி மருந்துகளுக்கு உண்டு.

மூக்கிலிருந்து ரத்தம் வழிதலை முழுமையாக நீக்க உதவும் சில மருந்துகள்

கீழே விழுந்ததால், அடிபட்டதால் மூக்கிலிருந்து ரத்தம் வருதல் – ஆர்னிகா.
நல்ல சிவந்த நிறத்தில் ரத்தம் வருதல் – பெல்லடோனா, இபிகாக், பாஸ்பரஸ், மில்லிபோலியம்.
குமட்டலுடன் நல்ல சிவந்த நிறத்தில் ரத்தம் வருதல் – இபிகாக்.
கருநிற ரத்தம் வருதல் – ஹமாமெலிஸ், லாச்சஸிஸ், க்ரோட்டலஸ், ஹாரிடஸ்.
மூக்கைச் சிந்தும் போது சிறிது ரத்தமும் சேர்ந்து வருதல் – பெர்ரம்பாஸ், பாஸ்பரஸ்.
காலையில் எழுந்ததும் முகம் கழுவும் போது மூக்கிலிருந்து ரத்தம் வருதல் – அம்மோனியம் கார்ப், ஆர்னிகா, பிரையோனியா.
பருமடையும் காலத்தில் மூக்கிலிருந்து ரத்தம் வருதல் – காலிகார்ப், பெர்ரம்பாஸ்.
சிவந்த நிற ரத்தம், உறையாமல் தொடர்ந்து வெளியேறுதல் – பாஸ்பரஸ், ஹமாமெல்லிஸ், சைனா
காரணமும் குறிகளும் சரியாகப் புலப்படாத போது மூக்கிலிருந்து ரத்தம் வருதலுக்கு பொதுவான மருந்து – மில்லிபோலியம்
மாதவிடாய் தடைபட்டு, விட்டு விட்டு வரும் போது மூக்கிலிருந்து ரத்தம் வருதல் – யூபியான்
வயது வந்த பெண்களுக்கு மாதவிடாய் அடக்கப்பட்டு மாதவிடாய்க்கு பதிலாக மூக்கிலிருந்து ரத்தம் வருமானால் – ப்ரையோனியா, லாச்சலிஸ், பல்சடில்லா.
மாதப்போக்கு வரத் தொடங்கியதும் மூக்கிலிருந்து வரும் ரத்தப்போக்கு தானாகவே நின்று விடுதல் – லாச்சஸிஸ்
உரிய ஹோமியோ மருந்து, சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களிலேயே நல்ல நிவாரணம் கிடைக்கும். ரத்த பெருக்கும் கட்டுப்படுத்தப்படும். தொடர்ந்து போதுமானளவு முழுவைத்துவ (Totality) அடிப்படையில் சிகிச்சை எடுத்தால் முழு குணம் நிச்சயம்.

***

ஹோமியோபதி மருத்துவம் மனித குலம் கண்டறிந்த மருத்துவ முறைகளிலிலேயே மகத்தானது. மனிதனை முழுமையாகக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. தாவரங்கள், பிராணிகள் போன்ற பேசாத உயிர்களுக்கும் இம்மருத்துவம் பெருந்துணை புரிவது கண்முன் நிகழும் ஆச்சரியம்.

ஆங்கில மருத்துவம் உடல்குறிகளை மட்டுமே பிரதானமாக ஆய்வு செய்கின்றது. ஒவ்வொரு குறிக்கும் ஒரு நோயின் பெயர் சூட்டி அதற்கென மருந்தளித்து நோயை அல்ல, குறியை மறைக்கின்றது. ஹோமியோபதியில் நோயின் பெயர்களுக்கு மருந்தளிக்கப்படுவதில்லை. நோயாளியின் உடல், மனக்குறிகள் அனைத்துக்கும் பொருத்தமான மருந்தளித்து நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து உடல் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் நீக்கப்படுகின்றன. நோய்க்குறிகளை நோய்களாகக் கருதி சிகிச்சையளிக்கும் ஆங்கில மருத்துவம் நோயின் அடிப்படையை அப்படியே விட்டுவிடுகிறது.

கோலின்சோனியா (COLLINSONIA) என்ற ஹோமியோ மருந்தின் சில குறிகளைப் பாருங்கள்.

மலச்சிக்கலுடன் – வயிற்றுவலி – தலைவலி – மூலம், கர்ப்பப்பை பிதுக்கம் – இடுப்பு வலி – வலியுள்ள மாதவிடாய் – விந்து ஒழுக்கு

இந்த வரைபடம் கோலின்சோனியாவைப் புரிந்து கொள்ள உதவும். நாட்பட்ட பிடிவாதமான மலச்சிக்கலுடன் வயிற்றுவலி, தலைவலி, இடுப்பு வலி, மூலம் போன்ற வேறு சில குறிகள் அனைத்தும் சேர்ந்திருந்தாலோ, ஒரு சில குறிகள் சேர்ந்திருந்தாலோ கோலின்சோனியா என்ற ஒரு மருந்து மட்டுமே அனைத்தையும் குணப்படுத்தும்.

ஆங்கில மருத்துவம் இத்தனைக் குறிகளையும் தனித்தனி வியாதிகளாகக் கருதி, தனித்தனி நிபுணர்களைக் கொண்டு, தனித்தனி மருந்துகள் மூலம் தனித்தனியாக சிகிச்சைகள் அளித்து நோயாளரை மேலும் மேலும் சிரமப்படுத்துகின்றது.

பருமடைந்த பெண்களுக்கு மாதம் தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சி சரியாக ஒழுங்காக அமைவதே ஆரோக்கியமானது. இதில் குழப்பங்கள் ஏற்பட்டு அத்துடன் வேறுபல உபாதைகளும் இணைந்து கொண்டால் ஹோமியோபதி மூலம் இயற்கையான வழிமுறைகளில் (AMMONIUM MURIATICUM) ‘அம்மோனியம் மூடியாடிகம்’ என்ற மருந்துக்குரிய பெண்களுக்கு மாதவிலக்கு இரவில் மட்டுமே ஏற்படும். அதிகளவு இருக்கும். அத்துடன் வாந்தி, வயிற்றுப் போக்கு, மலத்தில் ரத்தம், பாதங்களில் நரம்பு வலி எனப் பல குறிகளும் சேர்ந்திருக்கக் கூடும்.

இந்த வரைபடத்தையும் சற்றுப் பாருங்கள்.

‘அம்மோனியம் மூரியாடிகம்’ என்ற மருந்தின் சில குறிகள் இதில் உள்ளன.

மாதவிடாயின் போது – இரவு மட்டும் போக்கு, அதிகப்போக்கு – வாந்தி – வயிற்றுப் போக்கு – மலத்துடன் ரத்தம் – பாத நரம்புகளில் வலி

இங்கே காணப்படும் ஒவ்வொரு குறியையும் தனித்தனி வியாதியாக ஹோமியோபதி பார்ப்பதில்லை. ஒவ்வொரு குறிக்கும் ஒரு மருந்து கொடுப்பதில்லை. மனிதனின் ஒட்டுமொத்த குறிகளுக்கும் பொருந்தும் மருந்தை தேர்வு செய்து உரிய வீரியத்தில் உரிய கால இடைவெளியில் கொடுக்கும் போது தான் முழுகுணம் சாத்தியப்படுகிறது.

மனநிலைகளும், கற்பனை எண்ணங்களும், கனவுகளும் மனித உயிரியக்கத்தின் முக்கிய அம்சங்கள் என்பதால், அவற்றையும் ஹோமியோபதி கவனத்தில் கொள்கிறது. நோய்க்கு நேரடியாகச் சம்பந்தமில்லாதவை இவை என ஒட்டுமொத்தமாக இவற்றைப் புறக்கணிக்கும் ஆங்கில மருத்துவத்திற்கு மாறாக, எத்தகைய மதிப்புமிக்க விஞ்ஞான சாதனங்களாலும், மருத்துவத் தொழில்நுட்பக் கருவிகளாலும் கண்டறிய முடியாத உணர்வுக்குறிகளை, மனநிலைகளை, குணநலன்களை ஹோமியோ கண்டறிந்து, இவற்றுக்கு கூடுதல் மதிப்பளிக்கிறது.

எனவே, மனிதனை முழுமையாக ஆய்வு செய்து மருந்து தரும் ஹோமியோபதியின் பெருமைகளை பெருவாரியான மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை ஹோமியோபதியர்களுக்கும், அரசுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் உண்டு.blowing nose in tissue

Related posts

வாழை இலையின் பயன்கள்…!

nathan

அதிக நேரம் கணினியில் வேலை செய்பவரா நீங்கள் ? : பிரச்சனைகளும் தீர்வுகளும்…!

nathan

வைட்டமின் மாத்திரைகளை எடுக்கிறீா்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உடலில் ஏற்படும் சூட்டை உடனடியாக போக்கும் சூப்பர் டிப்ஸ்!

nathan

வாடகைத் தாய் மற்றும் சோதனைக் குழாய்கள் – குழந்தை பெற சிறந்த வழி எது?

nathan

உங்களுக்கு தெரியுமா காய்ச்சலுக்கான அருமையான நாட்டு மருத்துவ குறிப்புகள்!

nathan

மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சிறுநீரகத்தில் கற்கள் வருவதை தடுக்கும் இந்த கைவைத்தியங்கள்!.

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம் இதுதான்!

nathan