28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
Safran
ஆரோக்கியம் குறிப்புகள்

மாதவிலக்கு பிரச்னைகளுக்கான மருத்துவம்

எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், மாதவிலக்கிற்கு முன்பு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் மருத்துவத்தை பார்க்கலாம்.மாதவிலக்கிற்கு முன்பு பெண்களுக்கு பல்வேறு தொல்லைகள் ஏற்படுகிறது. வயிற்று வீக்கம், வாயுத்தொல்லை, மார்பக வலி, மயக்கம், கைகால்களில் சோர்வு உண்டாகிறது. மாதவிலக்கிற்கு முன்பு ஏற்படும் பிரச்னைகளுக்கு குங்குமப்பூ, கல்யாண முருங்கை, ஓமம், லவங்கம் ஆகியவை மருந்தாகிறது.

சோம்பு, ஓமத்தை பயன்படுத்தி மாதவிலக்கின்போது ஏற்படும் வலிகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் சோம்பு, கால் ஸ்பூன் ஓமம், ஒருபிடி அளவுக்கு புதினா, சிறிது பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி மாதவிடாய் காலத்துக்கு 5 நாட்களுக்கு முன்பு ஒருவேளை குடித்துவர மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்று வலி, இடுப்பு வலி, கைகால் குடைச்சல் வராமல் இருக்கும்.சுரப்பிகளில் ஏற்படும் கோளாறால் மாதவிலக்கு பிரச்னை ஏற்படுகிறது. உடல்பயிற்சி மிகவும் முக்கியம். இதனால் ஹார்மோன்கள், மனோநிலையில் சமநிலை உண்டாகும். சோம்பு சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. வயிற்றில் காற்று சேர்வதை தடுக்கிறது. ஓமம் சிறுநீர் பெருக்கியாகவும், மாதவிலக்கை தூண்டக் கூடியதாகவும் விளங்குகிறது. புதினா வலி நிவாரணியாகிறது. காற்றை வெளித்தள்ளும் தன்மை உடையது.

மாதவிலக்கிற்கு முன்பு ஏற்படும் மார்பக வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். கல்யாண முருங்கை இலை சாறு 20 மில்லி எடுக்கவும். இதனுடன் சம அளவு மோர் சேர்த்து மாதவிலக்கிற்கு முன்பு 10 நாட்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் குடித்துவர மாதவிலக்கு சமயத்தில் மார்பக வலி இல்லாமல் போகும். மாதவிலக்கிற்கு முன்பு இடுப்பு வலி, அடிவயிற்று வலி, மனநிலையில் மாற்றம், சோர்வு, மார்பக வலி போன்றவை ஏற்படும். மார்பகங்களில் ஏற்படும் வலிக்கு கல்யாண முருங்கை மருந்தாகிறது. இதற்கு முள்முருங்கை என்ற பெயர் உண்டு. இதன் இலைகள் பூவரசு இலையை போன்று இருக்கும். இது மாதவிலக்கை தூண்டக்கூடியது. ஹார்மோன்கள் கோளாறை சரிசெய்யும். சத்தூட்டமான கல்யாண முருங்கை, வலி நிவாரணியாக விளங்குகிறது.

மாதவிலக்கு கோளாறுகளுக்கு கழற்சிக்காய் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. ஒரு கழற்சிகாயை உடைத்து அதனுள் இருக்கும் பருப்பை எடுத்து, 5 மிளகு சேர்த்து ஒருவேளை சாப்பிட்டுவர மாதவிலக்கு முறையாக இருக்கும். மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல் பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். லவங்கத்தை நெய்விட்டு வறுத்து பொடி செய்து கால் ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து மாதவிலக்கிற்கு 10 நாட்களுக்கு முன்பு சாப்பிட்டுவர தலைவலி, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகள் இருக்காது. லவங்கம் முதுகுவலி, அடிவயிற்று வலியை குணப்படுத்தும்.மாதவிலக்கிற்கு முன்பு ஏற்படும் கைகால் வலி, தூக்கமின்மைக்கான மருந்து தயாரிக்கலாம். தண்ணீர் 50 மில்லி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து, மாதவிலக்கிறகு 10 நாட்களுக்கு முன்பு குடித்துவர மாதவிலக்கு சமயத்தில் கைகால் வலி, தூக்கமின்மை ஏற்படாது. மனச்சோர்வு நீங்கும். குங்குமப்பூ அதிகளவில் எடுத்துக்கொண்டால் வயிற்றுபோக்கு ஏற்படும் என்பதால் குறைவாக சேர்க்கவும். பதப்படுத்த உணவுகளை உண்பதால் அதில் இருக்கும் உப்புசத்து சேர்வது, நேரம் தவறி சாப்பிடுவதால் வயிற்றில் காற்று சேர்வது போன்றவை மாதவிலக்கு பிரச்னைக்கு காரணமாகிறது. இதை தவிர்க்க உடற்பயிற்சி அவசியம். இதனால் வியர்வை தூண்டப்பட்டு உப்பு வெளியேறும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை சேர்த்துகொள்வதால் மாதவிலக்கு பிரச்னைகள் சரியாகும்.
Safran

Related posts

உங்க ராசிப்படி உங்க காதலிக்கு உங்கள பிடிக்காம போக காரணம் என்னவா இருக்கும் தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

ஒரு கல்லை தேர்ந்தெடுங்கள்! உங்களது வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாங்க சொல்லறோம்!

nathan

அடேங்கப்பா! 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த ரூபிணி இது ; எப்படி இருக்குறாரு தெரியுமா..?

nathan

மனித உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைக்கும் உணவுகள்

nathan

பெண்களின் ராசிப்படி அவர்களின் அடிப்படை குணம் என்ன தெரியுமா?

nathan

ஆண்களே! எப்பவும் ஸ்மார்ட்டாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கணுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் உணவுகள்

nathan

தெரிந்துகொள்வோமா? ஊரடங்கு காலத்தில் குழந்தைகளை சுறுசுறுப்பாக்கும் செயல்கள்…

nathan

கோடை காலங்களில் நமது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்க கூடிய பானங்கள்!….

nathan