36.3 C
Chennai
Sunday, Jul 13, 2025
201701030929407444 Cholesterol lowering coriander seeds powder SECVPF
ஆரோக்கியம் குறிப்புகள்

கொழுப்பை குறைக்கும் தனியா பொடி

மல்லி(தனியா)யை பொடி அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.

கொழுப்பை குறைக்கும் தனியா பொடி
இன்றைய கால சூழலில் சர்க்கரை நோய் அதிகமாக காணப்படுகிறது. தனியா(மல்லி(தனியா)) பொடியை உட்கொண்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்று பல ஆராய்சிகள் கூறுகிறது. மல்லி(தனியா)ப்பொடியில் 8% நார்ச்சத்து மற்றும் 2.9% கால்ஷியம் அதில் அடங்கியுள்ளது.

மிகவும் ஆபத்தான சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவை அழிக்க மல்லி(தனியா) பயன்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சால்மோனெல்லா பாக்டீரியா உணவு சம்பந்தமான நோய்களை உண்டாக்கும். உங்கள் உணவுகளில் மல்லி(தனியா) போன்ற ஆரோக்கியமான மசாலாக்களை சேர்த்தால் இவ்வகை நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

மல்லி(தனியா)யில் பைடோந்யூட்ரியெண்ட் குணங்கள் உள்ளதால் தான் நமக்கு பல மருத்துவ பயன்களை அளிக்கிறது. உடல்நல பலன்களை தவிர மல்லி(தனியா) பொடி பருக்களை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. மல்லி(தனியா) பொடியையும் மஞ்சளையும் அல்லது மல்லி(தனியா) சாற்றை பயன்படுத்தி பருக்களை பெரிதளவில் குறைக்கலாம்.

மல்லி(தனியா) பொடி கொலஸ்ட்ராலை வெகுவாக குறைக்கும். மல்லி(தனியா)யை பொடி அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மாதவிடாயின் போது இரத்த கசிவு அதிகமாக இருந்தால் மல்லி(தனியா) பொடியை அல்லது மல்லி(தனியா) விதையை வெந்நீரில் போட்டு உட்கொள்ளுங்கள்.

மேலும் மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்று வலியை போக்கும் சக்தி கொண்டது மல்லி(தனியா) பொடி. மல்லி(தனியா) எந்த வடிவத்தில் (இலை, விதை, பொடி) இருந்தாலும் சரி, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் உடலில் உள்ள இயக்க உறுப்புகளுக்கு எதிராக போராடும்.201701030929407444 Cholesterol lowering coriander seeds powder SECVPF

Related posts

7 மணி நேரத்திற்கு குறைவான தூக்கம் ஆயுளை குறைக்கும்

nathan

இதயத்தைப் பாதுகாத்திட, நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பழக்கவழக்கங்கள்!

nathan

கல்லீரல் வீக்கம் குறைய வேப்பம் பட்டை கஷாயம்

nathan

ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

nathan

எப்போதும் கவலைப்படுகிறீர்களா? சிறப்பான தீர்வு!…

nathan

தெரிஞ்சிக்கங்க… வேப்பிலையின் சிறந்த 8 குணநலன்கள்!!!

nathan

தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!! மருத்துவ குணங்கள் கொண்ட கோவைக்காயை

nathan

எந்த ராசிக்காரர்கள் வைரம் அணியக்கூடாது? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இதயநோய் வருவதை தடுக்கலாம்

nathan