கண்டதையும் சாப்பிட்டு தொப்பையை வளர்த்தாச்சு. ஆனால் எதை சாப்பிட்டா வளர்ந்த தொப்பை கரையும் என தேடி தேடி பல பரிசோதனைகள் செய்து பாத்திருப்பீங்க.
அப்படியும் தொப்பை குறையாமல் அடம் பிடிக்கிறதா? அதற்கு மிக எளிதான் ஒரு ட்ரிக் உண்டு. அதாவது தொப்பையை குறைக்க அன்னாசி.
அன்னாசி இதயத்தை வலுப்படுத்தும் :
அன்னாசிப் பழம் சுவை யாருக்கும் பிடிக்கும். அன்னாசியில் பல நன்மைகள் உண்டு. அதிலுள்ள தாது பொருட்கள் உடலுக்கு மிகவும் நன்மைகளை தருகின்றன. இதயத்திற்கு நல்லது.
தொப்பையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் வெறும் 10 நாட்கள் தொடர்ந்து இங்கே சொல்லப்பட்டிருக்கும் முறைப்படி அன்னாசியை சாப்பிட்டால் கண்டிப்பாக குறைந்துவிடும்.
அன்னாசியில் உள்ள சத்துக்கள் :
பொட்டாசியம், கால்சியம் மாங்கனீஸ் போன்ற முக்கிய மினரல் உடல் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கின்றது.
அவை இதய நலனுக்கு இன்றியமையாத சத்துக்கள். இவை அன்னாசியில் அதிகம் உள்ளது.
ஒரு நாளைக்கு நம் உடலுக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் அண்ணாசிப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும்.
அன்னாசி பழத்தை எப்போதும் புதிதாகவே வாங்கி உடனுக்குடன் உபயோகியுங்கள்.
அன்னாசியின் நன்மைகள் !!
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.
அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாது.
இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.
தொப்பை குறைக்க :
ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிட வேண்டும்.
இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொந்தி கரைய ஆரம்பிக்கும்.
உடல் இளைக்க வேண்டுமா?
அன்னாசியில் ரசம் வைத்து சாப்பிட்டிருக்கிறீர்களா? மிளகு ரசம் செய்யும் போது அதில் அன்னாசி துண்டுகள் போட்டு செய்யுங்கள்.
தினமும் அல்லது வாரம் 4 நாட்கள் இந்த ரசத்தை ஒரு டம்ளர் பருகவும். உடல் 2- 3 கிலோ வரை ஒரே மாதத்தில் இளைப்பது உறுதி.