27.3 C
Chennai
Wednesday, Jan 15, 2025
201612311259031825 Wheat rava upma SECVPF
சிற்றுண்டி வகைகள்

சத்தான கோதுமை ரவை உப்புமா

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்த சம்பா ரவை அல்லது கோதுமை ரவை உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான கோதுமை ரவை உப்புமா
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
வரமிளகாய் – 2
இஞ்சி – சிறிது
கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

* பின் அதில் பொருங்காயத்தூளை தூவி, வரமிளகாயை கிள்ளிப் போட்டு, இஞ்சியை தட்டிப் போட்டு ஒரு முறை கிளற வேண்டும்.

* அடுத்து அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.

* வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் பின்னர் அதில் ஒரு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

* தண்ணீர் கொதித்ததும், அதில் கோதுமை ரவையை சேர்த்து, நன்றாக கிளறி சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைக்கவும்.

* பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல், தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி இறக்கிவிட வேண்டும்.

* இப்போது சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி!!!

* இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.201612311259031825 Wheat rava upma SECVPF

Related posts

கடலைப்பருப்பு ஸ்வீட் போண்டா

nathan

இளநீர் ஆப்பம்

nathan

சத்து நிறைந்த கொள்ளு கார அடை

nathan

ஸ்டீம்டு அண்ட் ஃப்ரைடு மணி பேக்

nathan

சத்தான ஸ்நாக்ஸ் தினை – உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

சூப்பரான பொரித்த இனிப்பு மோதகம்

nathan

பலாப்பழ தோசை

nathan

பிரெட் மோதகம்

nathan

பால் அப்பம் செய்முறை விளக்கம்

nathan