என்னென்ன தேவை?
கோதுமை மாவு – 1.5 கப்
சர்க்கரை – 1/2 கப்
வாழைப்பழம் – 1
பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1.5 தேக்கரண்டி
எண்ணெய் – 3/4 கப்
வெண்ணிலா – 2 தேக்கரண்டி
சூரியகாந்தி விதைகள் – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
முந்திரி – 1/2 கப்
எப்படிச் செய்வது?
முதலில் வாழைப்பழங்களை நன்றாக மசித்து வைக்கவும். கோதுமை மாவை ஒரு சல்லடையில் எடுத்து சலிக்கவும். பின் அவற்றுடன் சமையல் சோடா, மற்றும் சிறிது பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் எண்ணெய் எடுத்து சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். மசித்து வைத்துள்ள வாழைப்பழங்களை அவற்றில் சேர்த்து கலக்கவும். பின் கோதுமை மாவு கலவையை சேர்க்கவும், அதனுடன் முந்திரி மற்றும் சூரியகாந்தி விதைகள் சேர்க்க நன்கு கலக்கவும். ஒரு பான்னில் எண்ணெய் தடவி அதில் இந்த கலவையை ஊற்றி பேக் செய்யவும். சுவையான கோதுமை வாழை கேக் தயார்.