என்னென்ன தேவை?
ஓமவல்லி இலை – 10-12,
கடலைமாவு – 1 கப்,
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,
அரிசி மாவு – 1/2 கப், உப்பு,
எண்ணெய் – தேவைக்கு,
சோளமாவு – 2 டீஸ்பூன்,
ஓமம் கசக்கியது – சிறிது.
எப்படிச் செய்வது?
மூன்று மாவையும், மிளகு, உப்பு, ஓமம், தேவையான தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதமாக கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, ஓமவல்லி இலையை சுத்தம் செய்து காம்பை கிள்ளி, கரைத்து வைத்த மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுத்து சூடாகபரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மூலிகை வாசம் மூக்கை துளைக்கும். இந்த பஜ்ஜி வாயு தொந்தரவையும், சளியையும் போக்கும்.