இன்று பல இளம் தலைமுறையினரும் கவலைக் கொள்ளும் விஷயங்களில் ஒன்று பெர்சனாலிட்டி மற்றும் உயரம் தான். ஆம், குட்டையாக இருப்பதன் மூலம், மற்றவர்கள் கிண்டல் செய்வதால், தம்மீதுள்ள தன்னம்பிக்கையை இழக்கின்றனர். எனவே உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமானால், உண்ணும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் என ஒருசிலவற்றை பின்பற்றி வர வேண்டும்.
நீங்கள் உங்கள் குழந்தை உயரமாக வளர நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சிலவற்றை பின்பற்ற வையுங்கள். இதனால் அவர்கள் இயற்கையாக உயரமாக வளர ஆரம்பிப்பார்கள். சரி, இப்போது உயரமாக வளர்வதற்கு மேற்கொள்ள வேண்டியவைகள் என்னவென்று பார்ப்போமா!!!
சரிவிகித டயட் காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமின்றி, பால் மற்றும் பால் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றில் தான் எலும்புகளின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான கால்சியம் அதிகம் உள்ளது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சீஸ், தயிர், பன்னீர் போன்றவற்றை அதிகம் கொடுக்க வேண்டும்.
தண்ணீர் காப்ஃபைன், கார்போனேட்டட் பானங்கள் போன்றவற்றை தவிர்த்து, தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும் மற்றும் டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேறி, எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
போதுமான தூக்கம் ஒருவர் தூங்கும் போது, பாதிக்கப்பட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படுவதோடு, உடலும் வளர்ச்சியடையும் என்று நிரூப்பிக்கப்பட்டுள்ளது. எனவே உயரமாக, உடலுக்கு போதிய ஓய்வை வழங்க வேண்டும். அதிலும் சிறுவயதிலேயே 8-11 மணிநேர ஆழமான தூக்கத்தைக் கொண்டால், ஒருவர் நல்ல உயரமாக வளர முடியும்.
சிம்பிளான உடற்பயிற்சிகள் ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடுவதைத் தவிர்த்து, விளையாட்டுக்களில் அதிகம் ஈடுபட்டால், உடல் நன்கு வளர்ச்சி அடையும். அதிலும் கூடைப்பந்து, கைப்பந்து, கால் பந்து, கிரிக்கெட், டென்னிஸ், நீச்சல் போன்றவற்றை விளையாடுவது மட்டுமின்றி, ஸ்கிப்பிங், கம்பியில் தொங்குவது போன்றவையும், உயரமாவதற்கு உதவி புரியும்.
யோகா யோகாக்களில் உயரத்தை அதிகரிப்பதற்கான யோகாக்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொண்டு அவற்றைப் பின்பற்றினால், உயரமாகலாம். யோகாவில் தடாசனம் உயரமாவதற்கு உதவும். ஆகவே உங்கள் குழந்தைகளை சிறு வயதிலேயே யோகாக்களில் ஈடுபடுத்துங்கள்.