25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
pengal
மருத்துவ குறிப்பு

கூடுதல் கொலஸ்ட்ராலால் அவதியுறும் பெண்கள்.

கூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபால ருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாகும்.

இருந்த போதும் பெண்களை பொறுத்தமட் டில் மிக அதிகப்படியான பெண்கள் பாதிக்கப் படுவது கூடுதல் கொஸ்ட்ரால் காரணமாகத் தான். முக்கியமாக சாதாரண மெலிந்த தேகத்துடன் இருக்கும் பெண்கள் கூட, திருமணத் திற்கு பின் எடை அதிகரித்து கூடுதல் உடல் பருமனை பெற்று விடுகிறார்கள்.

சந்தோஷமான சூழ்நிலை, விசேடமான விருந்து உப சரிப்பு முதலியவை காரணமாக பெண்கள் திருமணத்திற்கு பின் உடல் பருமனை பெறு வது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து விடுகிறது. இதனை தடுத்துக் கொள்ள முன்னெச்சரிக் கையோடு கூடிய உணவு பழக்கவழக்கங்கள் வைத்துக் கொள்ளுதல் அவசி யமாகும். அத்துடன் உடலில் கொழுப்பு சேரக்கூடிய உணவு பதார்த்தங்களை பெரிதும் தவிர்த்தலும் வேண்டும்.

முதல் பிரசவத்திற்கு முன்பாக உடல் பருமன் அதிகமாவதால் பெண்கள் பலவிதத்திலும் உடல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

எனவே திருமணத் திற்கு முன்பும், பின்பும் பெண்கள் ஒரே சீரான உடல் பருமன் கொண்டு விளங்கு வதற்கும் ஆரோக்கியமான உடல் நிலையை பெறுவதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் மிக மிக அவசியமாகும்.

கொழுப்பு என்பது உடலுக்கு மிகவும் அவசியமான, உணவிலிருக்கும் ஒரு முக்கியமான மூலக்கூறு. ஒரு கிராம் கொழுப்பு 9 கலோரி சக்தி தரும் (கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தானது 4¾ கலோ ரியை மட்டுமே தரும்).

கொழுப்புச் சத்தானது கொழுப்பு அமிலங் களாக (Fatty Aci ds) கிளிசரால் ஆகவும் கிளைகோஜென் ஆகவும் சேமித்து வைக்கப்படுகிறது.

இப்படியாக கொழுப்பு, உடலில் சேமித்து வைக்கும் தன்மை உடையதாகவே உள்ளது. உடனடி எனர்ஜி தேவைக்கு அவசியமான மாவுச் சத்தைவிட அதிகப் படியான மாவுச்சத்தும் (அரிசிப் பதார்த் தங்கள்) கொழுப்பாகவே சேமிக்கப்படுகிறது.

அதனால், உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பது மட்டுமே பிரச்னை அல்ல. நம் மக்களின் உணவில் அரிசிப் பதார்த்தங்கள், பெரிய வாழைப்பழம், மாம்பழம், இனிப்பு போன்ற மாவுச் சத்து அதிகமாக இருப்பதும் இதற்குக் காரண மாகலாம். கொழுப்பு உடலுக்கு சக்தியையும் சூட்டையும் தருவது மட்டுமல்ல. சிறு உறுப்புகளையும் நரம்புகளையும் பாதுகாக்கும் உறைகளுக்கும் அவசியம்.

விற்ற மின்கள் A, D, E- K போன்ற முக்கியமான விற்றமின்கள் கொழுப்பில் கரையக் கூடியவை.

இதனாலும், கொழுப்பு மிக முக்கியமா னது. அட்ரீனல் மற்றும் இனப்பெருக்க ஹார்மோன்களுக்கும் கொழுப்பு அமிலங்கள் மிக முக்கியமானவை.

கொழுப்பில் கரையும் விற்றமின்களை விற்றமின் D என்று கூறுவார்கள்.

இவை குறைந்தால் பலவித சரும நோய்கள், பித்தப்பை கல், தலைமுடி உதிர்தல், வளர்ச்சி குறைவு, மலட்டுத்தன்மை, சிறுநீரக ப்ராஸ்டேட் மற்றும் மாதவிடாய் பிரச்னைகள் உருவாகும்.

குடலில் விற்றமின் B உருவாவதற்கும் கொழுப்புச்சத்து அவசி யம். மூளையின் நினைவாற்றலுக்கும் கொழுப்பு மூலக்கூறுகள் முக்கியம்.

ஆனால் இவை எப்போதும் கட்டு பாட்டில் வைக்கப்பட வேண்டியதும் அவசியமாகின்றது, ஏனென்றால் அதிகப் படியான கொழுப்பு சேரும் போது அது தொடர்பான பலவித உடல் உபாதைகளும் தொற்றிக் கொள்ளும்.

ஒருவரது உணவில் 65% மாவுச்சத்தும் 25% புரதச்சத்தும் 5-10% கொழுப்புச்சத்தும் இருந்தாலே போதுமானது. இவற்றோடு, காய்கறிகள், பழம், பருப்பு (Nuts) என இருப் பதையே சமச்சீர் உணவு என்கிறோம்.

துரித உணவு (Fast Food), வாரக் கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போகாமல் இருக்கும்படி தயாரிக்கப்படும் உணவு (Frozen Food), ஹொட்டேல் உணவுபோலவே வீட்டுச் சமையலில் எண்ணெய் அதிகமாக்கி வறுத்தவை (Fried food), அதிகம் பொரித்த உணவுகள் (Deep Fried Food), நெய்யும் இனிப்பும் அதிகமுள்ள உணவுகள் ஆகியவையும் கூட, இப்போது பாரம்பரிய உணவுமுறையிலும் ஊடுருவி விட்டது.

இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவையும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து உடல் நலத்தை பாதிக்கிறது.

ஒவ்வொரு நாள் உணவிலும் 5 சத விகிதம் கொழுப்பு, நிறைய காய்கறிகள், குறைவான அளவில் பழம் ஆகியவை அவசியம்.

மிகக்குறைவான ஆல்ஹகால் மற்றும் தவிர்க்கப்பட்ட புகைப்பழக்கம் ஆகியவை நல்லது. எடை குறைப்பு மற்றும் ரத்தக்கொ திப்பு, சர்க்கரை நோய், சரியான கட்டுப்பாடு என்பது மிக அவசியம்.

நோய் என்று வருமுன்பே பூமியிலே கால் பதியுங்கள். சுத்தமான காற்றைச் சுவாசித்து, மற்ற மனிதர்களையும் நேரில் கண்டு, உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் அசைவே உயிர்! இது உடற்பயிற்சியினால் மட்டுமே சாத்தியம். உணவினாலோ, மருந்தின் மூலம் மட்டுமோ சாத்தியமில்லை!pengal

Related posts

செக்ஸ் உறவு பற்றி கணவரை விட தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்

nathan

கொலஸ்ட்ராலை கரைக்க உதவும் இந்த அற்புத பொருள்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு??

nathan

தினமும் சிறிது துளசி இலைகளை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் பெறும் நன்மைகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த காளான் சாப்பிட்டா பெண்களுக்கு குழந்தை சீக்கிரம் உண்டாகுமாம்…

nathan

மகளிர் முன்னேற்றத்தில் பங்கு கொள்வோம்

nathan

மர்ம காய்ச்சல் -ஆயுர்வேத தீர்வு

nathan

எண் 6 (6,15,24) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் அதிகம் பகிருங்கள்

nathan

நெஞ்சுவலி எல்லாம் மாரடைப்பு அல்ல: டாக்டர்கள் கருத்து

nathan

நீங்க ஒரு அப்பாவா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan