25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
image2 2
மருத்துவ குறிப்பு

கண்ணை மறைக்கும் மது போதை

மது மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. மது அருந்துவது ஒரு மேன்மையான நாகரிகம் போல் திரைப்படங்களில் காட்டப்படுகின்றன. அதன் காரணமாகவும், மது எளிதாக எங்கும் கிடைப்பதாலும் மாணவர்களும் இதற்கு அடிமையாகி வருகின்றனர். ஆனால், அது எத்தகைய தீமைகளை மனிதனுக்கு கொடுக்கிறது என்பதை பல ஆய்வுகள் தெரிவித்திருகின்றன.
மது உணர்வூட்டும் ஒரு பொருள் அல்ல. அது உணர்வை, உடலை அழிக்கும் ஒரு நச்சுப் பொருள். மது அருந்துவதால் சுதந்திர உணர்வு தொடக்கத்தில் தோன்றுவதாகவும், அதிக சக்தி கிடைப்பதாகவும், களைப்பு நீங்குவதாகவும் எண்ணம் தோன்றும். அது உண்மையில்லை. மது நேரடியாக ரத்தத்தில் கலந்து விடுவதால் மது குடித்தவுடன், சிறிது நேரத்திற்கு உற்சாகம் பிறக்கிறது. மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனால் நாளடைவில் எல்லா நோய்களையும் கொடுத்து சிறிது சிறிதாக நம்மை அழிக்கிறது.
மதுவின் தீமைகளை உணர்ந்த உலக சுகாதார நிறுவனம் ‘மது நீண்ட நாளைய நலக்கேடு, தீய செயல்’ என்று கூறுகிறது. மது உடல் நலத்தைக் கெடுப்பதோடு சமுதாயச் சீர்கேடுகளையும் ஏற்படுத்துகிறது.
மதுவிற்கு அடிமையானவர்கள், ஏழைகள், கூலித் தொழிலாளர்கள், கடின உழைப்பாளிகள், கவலைப்படுகின்றவர்கள், மன நிம்மதி இழந்தவர்கள் போன்றவர்களே அதிகம் என மது அருந்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மகிழ்ச்சிக்காக குடிக்க ஆரம்பித்தவர்கள் பிறகு மதுவிற்கு அடிமையாகி விடுவதோடு, குடும்பத்தையும் துயரத்தில் ஆழ்த்தி விடுகின்றனர். குடிப்பழக்கம் உள்ள வீட்டுக் குழந்தைகளும் நாளடைவில் அந்த பழக்கத்திற்கு ஆளாகி கெட்டுப் போகும் நிலை ஏற்படுகிறது.
மது மூளையையும், நரம்பு மண்டலத்தையும் பாதித்து உடல் நலத்தை சீர்குலைக்கிறது. மது குடிப்பதால் கல்லீரல் பாதிக்கப்பட்டு புற்று நோய் ஏற்படுவதற்கு காரணமாகிறது.
மது வயிற்றுக்குள் செல்லும் போது இரைப்பை சுழற்சி காரணமாக பாதிக்கப்பட்டு குடலில் புண் ஏற்படுகிறது.
வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கிறது. தோளிலும், காலிலும் தசை நார் இழுப்பு ஏற்படுகிறது. உடலில் சர்க்கரை சத்தைச் சீர்படுத்தும் கணையம் பாதிக்கப்படுகிறது. அடிக்கடி மறதி ஏற்பட்டு சோர்வு காணப்படும்.
‘கோர்ஸா காஃப்ஸ் சின்ட்ரோம்’ என்ற மூளை பாதிப்பு நோய் ஏற்பட வழி வகுக்கிறது.
உயிர்சத்து `பி’ குறைவால் வெர்னிக் சின்ட்ரோம் என்ற நோய் ஏற்பட்டு நடக்க முடியாமல் போகவும் வாய்ப்பு உள்ளது. மன நோய்களுக்கான குறைபாடுகளும் ஏற்படும். மது அருந்துபவர்களுக்கு, உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவதால் தொற்று நோய்கள் வந்தால் எளிதில் குணமாவதில்லை.
இன்னும் எத்தனையோ பிரச்சினைகள். அத்தனையும் மதுவினால் ஏற்படுவதே. முதலில் மதுவை மனிதன் குடிப்பான். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மது மனிதனைக் குடிக்கும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.image2 2

Related posts

உங்க பற்கள் ஆடினா உடனே அவற்றை பிடுங்க வேண்டாம்!இதை முயன்று பாருங்கள்..

nathan

உயர் இரத்த அழுத்த பிரச்சனை வரக்கூடாதா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

கோடையில் சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும்போது கடைபிடிக்க விஷயங்கள் என்னென்ன தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்…பிறக்கப்போவது ஆனா? பெண்ணா?

nathan

மார்பக புற்று நோயின் அறிகுறிகள் என்ன?

nathan

உங்க முகம் ஹீரோயின் மாதிரி பிரகாசமா மின்னுமாம்…!தண்ணீரை நீங்க ‘இப்படி’ பயன்படுத்தினால்…

nathan

உங்கள் கைரேகை இப்படி இருக்கிறதா? அப்படின்னா நீங்க கோடீஸ்வரர் தான்!

nathan

மரு, கட்டியை குணப்படுத்தும் இரணகள்ளி

nathan