தலைமுடி சிகிச்சை

இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணா முடி உதிர்வை நிறுத்தி வழுக்கை விழாமல் தடுக்கும் …!

காய்கறிகளின் நன்மைகள் ஏராளம். அதிலும் எந்தவித வேதி பொருட்களையும் பயன்படுத்தாமல் இருக்கின்ற காய்கறிகள் உடலுக்கு பல நன்மைகளையே தரும். எந்த அளவிற்கு காய்கறிகளை சாப்பிடுகிறோமோ அந்த அளவிற்கு நாம் நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்கிறோம். பச்சை காய்கறிகளில் எண்ணற்ற ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது. எவ்வாறு உடல் ஆரோக்கியத்திற்கு இந்த காய்கறிகள் பயன்படுகிறதோ, அதே போன்று இவை முடியின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது.

இந்த பதிவில் கேரட் எவ்வாறு முடிக்கு நன்மை தருகின்றது என்பதையும்,கேரட் ஹேர் மாஸ்குகளை பற்றியும் அறிந்து பயன் பெறுவோம்.

தங்க காய்கறி கேரட்..!
பொதுவாக இந்த கேரட்டை தங்கத்திற்கு ஈடாகவே கருதுவார்கள். பார்ப்பதற்கு ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும் இந்த கேரட் பல்வேறு நலன்களை தனக்குள்ளே வைத்திருக்கிறது. இதில் வைட்டமின் எ, பி, சி, பாஸ்பரஸ், மெக்னீசியம் நிறைந்துள்ளது. இவை முடியின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முடியின் வளர்ச்சியை பெருக்கும்.

முடி உதிர்வதை நிறுத்த… இன்று அனைவருக்கும் இருக்கும் முடி சார்ந்த பிரச்சினைகளில் முதன்மையானது முடி உதிர்வே. இது ஊட்டசத்து குறைபாடு, மரபணு ரீதியாக, வேதி பொருட்களால்…இப்படி சில முக்கிய காரணிகளால் கொட்ட செய்யும். இதனை தடுக்க இந்த ஹேர் மாஸ்க் போதுமே..!

தேவையானவை :- 1 வெங்காயம் 1 கேரட் 2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை எண்ணெய்

செய்முறை :- இந்த ஹேர் மாஸ்க் செய்ய, முதலில் கேரட் மற்றும் வெங்காயத்தை நன்றாக நறுக்கி அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை எண்ணெய் சேர்த்து தலையில் தடவவும். பின் சிறிது ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசவும். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முடி உதிர்வு நின்று வழுக்கை ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம்.

வறண்ட மண்டைக்கு… நாம் அதிக நேரம் வெளியில் சுற்றுவதால் நம் முடியின் ஆரோக்கியம் மிகவும் மோசமடைகிறது. இதனால், மண்டை வறண்டு, முடி உதிர்வை ஏற்படுத்துகிறது. முடியிற்கு ஈரப்பதத்தை தந்து நன்கு வளர இந்த ஹேர் மாஸ்க் உதவும்.

தேவையானவை :- 1 கேரட் 1/2 அவகேடோ 2 டேபிள்ஸ்பூன் தேன்

செய்முறை :- கேரட் மற்றும் அவகேடோ பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி, அதனை அரைத்து கொள்ளவும். அத்துடன் தேன் கலந்து அடி முடியில் நன்றாக தடவி மசாஜ் செய்யவும். பின் வெது வெதுப்பான நீரில் தலையை அலசினால் முடியிற்கு அதிக ரத்த ஓட்டம் ஏற்பட்டு வறட்சி நீங்கும். மேலும் ஈரப்பதமான மண்டையாக மாறும்.

முடி உடைதலை தடுக்க… பொதுவாக முடி அதிகம் உடைகிறதென்றால் முடியின் ஊட்டம் குறைந்துள்ளது என்று அர்த்தம். முடியை அதிக பலமாக மாற்ற இந்த மாஸ்க்கை செய்து பாருங்கள்.

தேவையானவை :- 1 கேரட் 1 வாழைப்பழம் 2 டேபிள்ஸ்பூன் யோகர்ட்

செய்முறை :- முதலில் கேரட் மற்றும் வாழைப்பழத்தை சிறிதாக நறுக்கி, அவற்றை அரைத்து கொள்ளவும். பின், அதனுடன் யோகர்ட் சேர்த்து கலக்கி முடியில் தடவவும். 30 நிமிடம் கழித்து இந்த ஹேர் மாஸ்க்கை மிதமான சுடு நீரில் கழுவினால் முடி உடைவதை தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

முடி நன்கு வளர… முடி நன்றாக வளர வேண்டும் என்பது பலருக்கு இருக்கும் ஆசைதான். முடியின் வளர்ச்சியை தடை செய்யும் எல்லாவித காரணிகளையும் இந்த ஹேர் மாஸ்க் தாண்டி வருகிறது. முடியின் அடி வேரை புத்துணர்வூட்டி முடியை வளர செய்கிறது.

தேவையானவை :- 1 கேரட் 2 டேபிள்ஸ்பூன் யோகர்ட் 5 பப்பாளி துன்டுகள்

செய்முறை :- நன்கு பழுத்த பப்பாளியை 5 துண்டு எடுத்து அதனுடன் நறுக்கிய கேரட் சேர்த்து அரைத்து கொள்ளவும். அதனுடன் யோகர்ட் கலந்து முடியில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்யவும். பிறகு தலையை மிதமான சுடு நீரில் அலசவும். இந்த ஹேர் மாஸ்க் முடி வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் பப்பாளியில் உள்ள விட்டமின்கள் முடி உதிர்வை தடுக்கும்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்க… தலையில் ரத்த ஓட்டம் அதிகரித்தால்தான் அது முடியை நன்கு போஷாக்காக்கும். இல்லையேல், முடியின் ஆரோக்கியத்தை பாழாக்கி விடும். மண்டையில் நன்கு ரத்த ஓட்டம் நடைபெற இந்த ஹேர் மாஸ்க் பயன்படும்.

தேவையானவை :– 1 கேரட் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

செய்முறை :- நன்கு அரைத்த கேரட்டை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து சிறிது ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்தால் மண்டையின் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

1 1535632578

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button