சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. தினமும் ஒரு வகை சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. வரகு கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
உடலுக்கு வலிமை தரும் வரகு கஞ்சி
தேவையான பொருட்கள் :
வரகு அரிசி – கால் கப்
பூண்டு – 10 கல்
சுக்கு – ஒரு துண்டு
சீரகம் – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
பால் – 1 கப்
உப்பு – தேவைக்கு
சின்ன வெங்காயம் – தேவைக்கு
செய்முறை :
* பூண்டை தோல் உரித்து வைக்கவும்.
* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
* சுக்கை தட்டி வைக்கவும்.
* வரகு அரிசியை சுத்தம் செய்து ஒரு டம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும்.
* வரகு அரிசி பாதி அளவு வெந்ததும், பூண்டு பல், சுக்கு, சீரகம், வெந்தயம், பால் சேர்த்து வேகவிடவும்.
* நன்றாக வெந்து குழைவாக வந்ததும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.
* சத்தான வரகு கஞ்சி ரெடி. வெங்காயம் தூவி பருகவும்.
* இதற்கு தொட்டுக் கொள்ள, கறிவேப்பிலை துவையல் அருமையாக இருக்கும்.