201612261401124645 wife doing romantic things to do for husband SECVPF
மருத்துவ குறிப்பு

கணவனுக்காக மனைவி செய்யும் ரொமாண்டிக்கான விஷயங்கள்

பெண்கள் தங்கள் கணவனுக்காக செய்யும் ரொமாண்டிக் விஷயங்கள் தான் இல்லறத்தில் அதிகப்படியான காதலை உண்டாக்கும். உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் செய்யும்.

கணவனுக்காக மனைவி செய்யும் ரொமாண்டிக்கான விஷயங்கள்
ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த சினிமாவிலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை. ஆண் தான் மல்லிகைப்பூ, அல்வா வாங்கி செல்வார், ஆண் தான் திரைப்படத்திற்கு அழைத்து செல்வார். பெண்கள் சும்மாவே இருப்பார்கள். உண்மையில் பெண்கள் தங்கள் கணவனுக்காக செய்யும் ரொமாண்டிக் விஷயங்கள் தான் இல்லறத்தில் அதிகப்படியான காதலை உண்டாக்கும். உறவில் நெருக்கத்தை அதிகரிக்கவும் செய்யும்.

திருமணத்திற்கு முன் அம்மா எண்ணெய் தேய்த்து குளிக்க வைப்பதில் அக்கறையும், பாசமும் இருக்கும். திருமணத்திற்கு பிறகு மனைவி குளிப்பாட்டி விடுவதில் எல்லாமும் இருக்கும். கணவன் – மனைவியின் இல்லற வாழ்க்கையில் மிக ரொமாண்டிக்கான விஷயம் என இதை எளிதாக குறிப்பிடலாம்.

கணவன் ஆய்ந்து ஒய்ந்து வேலைகளை முடித்து வீடு திரும்பும் போது, அவனை கேட்காமலேயே அவனுக்கு பிடித்த உணவுகளை சமைத்து பரிமாறுவது / ஊட்டிவிடுவது.

வீட்டு வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, ஏதேனும் நிகழ்வில் மற்றவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென கணவன் மீது கண்களை திருப்பி சிறு புன்னகையுடன் ஜாடை காண்பிப்பது.

காலையில் கணவர் அலுவலகம் கிளம்பியதில் இருந்து மதியம் சாப்பிட்டாச்சா என்று மெசேஜ் செய்வது மாலையில் வர தாமதம் ஆனால் எப்போது வீட்டிற்கு வருவீங்க என்று போனில் கேட்பது வரை எப்போது உங்களையே நினைத்து கொண்டிருக்றேன் என்பதை கணவருக்கு எளிய முறையில் ரொமாண்டிக்காக புரியவைக்க மனைவியால் மட்டுமே முடியும்.

டென்சன், கோபம், கவலையில் இருக்கும் கணவரை தனது கண் அசைவின் மூலம் ரொமாண்டிக்கான மூடிற்கு கொண்டு செல்ல மனைவியால் மட்டுமே முடியும்.

ஒரு சில விஷயங்கள், பொருட்கள் கணவனுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அதை அவரே கூட மறந்திருப்பார். என்றோ கூறியதை நினைவில் வைத்து அதை தகுந்த தருணத்தில் வாங்கி வந்து பரிசளித்து கணவரை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைத்து விடுவார்கள் பெண்கள். 201612261401124645 wife doing romantic things to do for husband SECVPF

Related posts

கர்ப்ப கால பெண்களுக்கு இடுப்பு வலியை குறைக்க வழிகள்

nathan

தைராய்டு பிரச்சனைக்கான முக்கிய காரணங்கள்!!

nathan

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சுய பரிசோதனை

nathan

மூட்டு வாதம் போக்கும், வாய்ப்புண் ஆற்றும், அம்மை நோய் தீர்க்கும்… காளான் தரும் கணக்கில்லா பலன்கள்!

nathan

தைய்ராய்டு பிரச்சினையா?

nathan

மாதவிடாயைப் புரிதல் ஏன் முக்கியம்? ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

nathan

தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமா?

nathan

செரிமான பிரச்சனையை போக்கும் ஓமம் டீ

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் கர்ப்பகாலத்தில் இளநீரை அருந்தலாமா?

nathan