25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201612240852397984 millets kuzhi paniyaram SECVPF
சிற்றுண்டி வகைகள்

சிறுதானிய குழிப்பணியாரம் (காரம்)

சிறுதானிங்களை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. காலையில் சாப்பிட ஒரு சத்தான சிறுதானிய கார குழிப்பணியாரம் எப்படி என்று கீழே பார்க்கலாம்.

சிறுதானிய குழிப்பணியாரம் (காரம்)
தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி – 1/4 கிலோ,
சாமை – 150 கிராம்,
குதிரைவாலி – 100 கிராம்,
உளுந்து – 200 கிராம்,
கடலைப் பருப்பு – 50 கிராம்,
பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் – தலா 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காய்த்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இட்லி அரிசி, சாமை, குதிரைவாலி அரிசி, உளுந்து ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, ஊறவைத்து இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்.

* கடலைப் பருப்பை வறுத்து, மாவில் கொட்டி, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, நன்கு கலந்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.

* குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடனாதும் சிறிது எண்ணெய் ஊற்றி அதன் பின் அதில் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சுவையான சத்தான சிறுதானிய குழிப்பணியாரம் (காரம்) ரெடி.

பலன்கள்: குதிரைவாலி, சாமை, இட்லி அரிசி ஆகியவை ஒன்று சேர்வதால் இந்தப் பணியாரத்தைச் சாப்பிடும்போது, உடல் மந்தத்தன்மை அடையாது. உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். முழுவதும் ஆவியிலும் வேகாமல், எண்ணெயிலும் பொரிக்கப்படாமால் செய்யப்படுவதால், சத்துக்கள் சிதையாமல் உடலுக்குக் கிடைக்கும். குழந்தைகளுக்கு இந்தப் பணியாரம் மிகவும் பிடிக்கும். தேவைப்பட்டால், காரச்சட்னி சேர்த்துச் சாப்பிடலாம்.201612240852397984 millets kuzhi paniyaram SECVPF

Related posts

உருளைக்கிழங்கு பஜ்ஜி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய சமோசா

nathan

சத்து நிறைந்த கொள்ளு கார அடை

nathan

ரமழான் ஸ்பேஷல்: நோன்பு கஞ்சி செய்முறை…

nathan

மாலைநேர டிபனுக்கு ஏற்ற மைசூர் போண்டா

nathan

இட்லி மாவு போண்டா

nathan

சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் பன்னீர் ராஜ்மா மசாலா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு மசாலா போளி

nathan

சுவையான வெங்காய பொடி தோசை

nathan