என்னென்ன தேவை?
கோதுமை மாவு – 1 கப்,
நெய் – 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் – சிறிது,
பாகு வெல்லம் (துருவியது) – 1/2 கப்,
அலங்கரிக்க லேசாக வறுத்த சீவிய நட்ஸ் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
அடி கனமான ஒரு கடாயில் அல்லது நான்ஸ்டிக் பேனில் மிதமான தீயில் சூடானதும் நெய் விட்டு கோதுமை மாவை போட்டு வாசனை வரும்வரை நன்கு வறுக்கவும். பின் வெல்லத்தை போட்டு ஒரு கிளறு கிளறி, பிறகு இறக்கிவைத்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
அப்போது ஏலக்காய்த்தூள், நட்ஸை சேர்த்து கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி நெய் தடவிய கரண்டியால் நன்கு அழுத்தி சமப்படுத்தவும். அதன் மீது மீதி உள்ள நட்ஸ் சீவலை தூவி அலங்கரித்து ஆறியதும் துண்டுகள் போட்டு கடவுளுக்கு படைத்து பரிமாறவும். இது சத்தானதும் கூட. சூடான மாவுடன் வெல்லம் போட்டு 5-6 நிமிடம் கைவிடாமல் கிளற வேண்டும்.