25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
201612211128130123 how to make Aloo Palak SECVPF1
சிற்றுண்டி வகைகள்

சப்பாத்திக்கு சூப்பரான சைட் டிஷ் ஆலு பாலக்

கீரை மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு சப்பாத்திக்கு தொட்டு கொள்ள ஒரு சுவையான பஞ்சாபி சைட் டிஷ்ஷை எப்படி செய்வது என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

சப்பாத்திக்கு சூப்பரான சைட் டிஷ் ஆலு பாலக்
தேவையான பொருட்கள் :

பாலக்கீரை – ஒரு கட்டு
சின்ன உருளைக்கிழங்கு – 200 கிராம்
எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – இரண்டு
பச்சை மிளகாய் – இரண்டு
இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
தனியாதூள் – கால் டீஸ்பூன்
சீரக தூள் – கால் டீஸ்பூன்
மிளகு தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப

தாளிக்க :

எண்ணெய் – அரை டீஸ்பூன்
கடுகு – சிறிதளவு
உளுந்தம் பருப்பு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – இரண்டு
பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியை தனித்தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாலக் கீரையை 5 நிமிடம் வேக வைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு தாளித்த பின் அரைத்த ப.மிளகாய், வெங்காய விழுதை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளி விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

* அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், தனியாதூள், சீரக தூள், மிளகு தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

* பச்சை வாசனை போனவுடன் அதில் பாலக் கீரை அரைத்த விழுது சேர்த்து நன்றாக கிளறி ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

* சூப்பரான ஆலு பாலக் ரெடி.

* சப்பாத்தியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.201612211128130123 how to make Aloo Palak SECVPF

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் பயத்தம் பருப்பு தயிர் போண்டா

nathan

ஜாமூன் கோப்தா

nathan

சிறுதானிய போண்டா தினை – சோளம்

nathan

சுவையான பிரட் வடை தயார்

nathan

மட்டன் கொத்து பரோட்டா

nathan

முட்டை சென்னா

nathan

சுவையான சத்தான கேழ்வரகு வெங்காய தோசை

nathan

வாழைப்பூ அடை

nathan

அவகாடோ சாண்ட்விச்

nathan