25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201612201043347143 Chettinad fish urundai kulambu SECVPF
செட்டிநாட்டுச் சமையல்

சூப்பரான செட்டிநாடு மீன் உருண்டை குழம்பு

சிக்கன், மட்டன் உருண்டை குழம்பு சாப்பிட்டு இருப்பீர்கள். மீன் உருண்டை குழம்பு சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

சூப்பரான செட்டிநாடு மீன் உருண்டை குழம்பு
தேவையான பொருட்கள்:

மீன் – 1/2 கிலோ (துண்டு மீன்)
பச்சை மிளகாய் – 4
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – 2 கைப்பிடி
புதினா தழை – சிறிதளவு
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
தனியா தூள் – அரை ஸ்பூன்
சீரக தூள் – டீஸ்பூன்
முட்டை – 1
பிரட் தூள் – தேவைக்கு
தேங்காய் துருவல் – அரை கப்
முந்திரி – 15
எண்ணெய், உப்பு – தேவைக்கு

உருண்டை செய்ய :

முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.

மீனை வேகவைத்து தோல், முள் நீக்கி உதிர்த்த பின் மிக்சியில் போட்டு அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி முட்டையில் முக்கி ரொட்டித் துண்டுகளில் பிரட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்துக் எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

செய்முறை :

* வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தேங்காய் துருவல், முந்திரியை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* எண்ணெய் பிரிந்து வரும் போது கரம்மசாலா தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் சுடுதண்ணீர் ஒரு கப் விட்டு அது கொதிக்கும்போது பொரித்து வைத்துள்ள மீன் உருண்டைகளை போட்டு சிறுதீயில் கொதிக்கவிடவும்.

* நெய் மேலே மிதக்கும்போது அரைத்த தேங்காய் விழுதை போட்டு 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.

* கடைசியாக கொத்தமல்லி, புதினா இலை போட்டு இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான செட்டிநாடு மீன் உருண்டை குழம்பு ரெடி.201612201043347143 Chettinad fish urundai kulambu SECVPF

Related posts

செட்டிநாடு நெத்திலி கருவாட்டு குழம்பு

nathan

வட இந்திய ஸ்டைலில் காரமான கத்திரிக்காய் வறுவல்

nathan

செட்டி நாட்டு புளியோதரை

nathan

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

nathan

சூப்பரான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல்

nathan

செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்ய…!

nathan

செட்டிநாடு உப்பு கறி

nathan

சுவையான செட்டிநாடு இறால் குழம்பு

nathan

செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல்

nathan