25.8 C
Chennai
Monday, Jan 13, 2025
201612200922472916 illnesses come to hunger SECVPF
ஆரோக்கியம் குறிப்புகள்

பசியால் வரும் உடல்நலக்குறைபாடுகள்

இயற்கையான ஆரோக்கியம் இல்லாமல் சாதாரண சிறிய ஜலதோஷம் முதல் மிக கடுமையான நோய் வரை உடலுக்கு ஏற்படுவது எதுவுமே உடல் நலபாதிப்பு தான்.

பசியால் வரும் உடல்நலக்குறைபாடுகள்
ஆய்வுகளின் படி தழுதல் 4 மணிக்கொருமுறை வயிற்றுக்கு ஏதேனும் உணவு அளிக்க வேண்டும். இப்படிப்பட்ட முறையான நேர உணவு உடலின் செயல்பாட்டினை சீராக வைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. சரி இப்படி முறையாய் சாப்பிடாவிட்டால் என்னாகும். மூளைக்கு வேண்டிய க்ளுகோஸ் தேவையான அளவு கிடைக்காது. குறிப்பாக கார்போஹைடிரேட் உணவிலிருந்து எளிதாக கிடைக்கும் க்ளுகோஸ் கிடைக்காது. முழு தானிய உணவு, பழங்கள், காய்கறிகள் இவைகளிலிருந்து கிடைக்கும் சத்து சிறந்தது. இத்தகு சத்து கிடைக்காவிட்டால் மூளை சோர்வுறும், உடலில் சர்க்கரை சத்து குறையும். கவனமின்மை ஏற்படும்.

உடல் உணவு வேண்டும் என கூறும். பசியினை உணர்த்தும். இதனையும் ஒதுக்கும் பொழுது உடல் வியர்த்து சோர்வுறும். அவசரத்திற்கு கையில் கிடைத்ததை உண்பதால் சர்க்கரையும் ஏறும். முறையான சத்தும் கிடைக்காது. இதுவே பழக்கமானால் பல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இதுவே அரைகுறை உணவு உண்பவர்களுக்கு சர்க்கரை குறைவு, வைட்டமின் சத்துக்கள் கிடைக்காமை, தலைவலி, தலைசுற்றல் ஏற்படும். கல்லீரல் தான் சேமித்த சக்தியினைத் தரும்.

முறையான தேவையான உணவு தொடர்ந்து உண்ணாது இருந்தால் அவர்கள் அதிக மனச்சோர்வுடன் இருப்பர். சர்க்கரை அளவு எங்கோ கீழே போய் விடும்.

* மனம் நிலையாக இராது.
* தூக்கம் வராது. கடுமையான மலச்சிக்கல் இருக்கும்.
* அவர்கள் உடல் குளிர்ந்தே இருக்கும்.
* முடி கொட்டும்.
* எடை வெகுவாய் குறையும்.
* கர்ப்பம் தரிக்க முடியாது.

இத்தகு அறிகுறிகள் உணவு கிடைக்காது பசியோடு வருபவர்களுக்கு மட்டுமல்ல. தன்னை முறையாக கவனிக்காமல் பிறருக்காக நான் வேலை செய்து என் உடம்பினை அழித்துக் கொள்கிறேன் என்று பேசும் பலரும் மேற்கூறிய இத்தனை தாக்குதல்களையும் பெறுவர். எனவே தன் உடலை முறையாய் காத்தாலே பிற பணிகளை செய்ய முடியும் என்பதனை இன்றாவது உணருங்கள்.

பசி வந்தால் பத்தும் பறந்திடும்.

* மானம்
* குலம்
* கல்வி
* பலம்
* அறிவுத்தன்மை
* தானம்
* தவம்
* உயர்ச்சி
* தாளாண்மை
* அன்பு (காதல்)

* பசிதான் இன்றைய உலகில் மற்ற எல்லாவற்றினையும் விட மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. எய்ட்ஸ், மலேரியா, டிபி நோய் பாதிப்புகளைக் காட்டிலும்.

* அதிகமான மக்கள் பசியால் வருடந்தோறும் இறக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
* ஏழில் ஒருவர் பசியோடு இரவு படுக்கச் செல்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
* சுமார் 60 சதவீத பெண்களும் 1/5 பங்கு ஐந்து வயதுக்குக் கீழ் பசியால் வாடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
* ஆசியா, பசிபிக் பகுதியிலேயே அதிகம் பசியால் வாடும் மக்கள் உள்ளனர்.
* நாள் ஒன்றுக்கு ரூ.15 இருந்தால்கூட ஒருவருக்கு ஊட்டமான பசியில்லா உணவினை கொடுத்து விட முடியும் என்கின்றனர்.
* 1/7 உலக மக்கள் சிறிதும் சத்தே இல்லாமல் இருக்கின்றனர்.
* கிராம புறங்களில் 5-0 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் நல்ல சத்துணவு உண்பதில்லை.

பசி தரும் நோய் :

பசியோடு இருப்பவன் குடிக்கும் சுகாதாரமற்ற நீரினால் கினியா புழு நோய் ஏற்படுகின்றது. இந்த புழு 3 அடி நீளம் வரை வளரக் கூடியது.

* கிருமி தாக்குதல் சிறு குடலில் ஏற்படுவதால் காலரா நோய் தாக்குதல் ஏற்படுகின்றது. இது வாந்தி, வயிற்றுப் போக்கினை மிகவும் கடுமையாக்குவது வேகமாய் பரவும் தொற்று என்பதால் அநேகர் பாதிக்கப்படுவர்.
* வயிற்றில் ‘டேப்வார்ம்’ எனப்படும் நாடா பூச்சி தாக்குதல் ஏற்படுகின்றது. உண்ணும் உணவு செரிப்பதற்குள் இப்பூச்சி அதனை உண்டு விடுவதால் பாதிப்புடையவர் பசியோடே இருப்பர்.
* வைட்டமின் ‘ஏ’ சத்து குறைபாடு உணவின்மையால் எளிதாய் ஏற்படும்.
* இரும்பு சத்து குறைபாட்டினால் ரத்த சோகை, பார்வை பாதிப்பு ஏற்படும்.
* வைட்டமின்கள் குறைபாடு ஏற்படும்.
* சரும பாதிப்பு
* இருதய பாதிப்பு
* சக்தியின்மை

இவை யாவும் பசியினால் அடிக்கடி வாடுவோருக்கு ஏற்படும் பாதிப்புகள்.

தண்ணீர் இல்லாமல் 7&10 நாட்கள் வரை உயிர் இருக்கும். உணவு இல்லாமல் உடல்நிலைக்கு ஏற்ப 30&40 நாட்கள் வரை ஒருவர் கடும் போராட்டத்துடன் தான் காலம் தள்ள முடியும் மருத்துவ உலகில் நாங்கள் பார்க்கும் மற்றொரு விநோதம் வசதிபடைத்த இளம் வயது பெண்கள், தான் ஒல்லியாக அழகாக இருக்க வேண்டும் என்ற வெறித்தனமான ஆசையின் காரணமாக உணவே சரியாக உண்ணாமல் பிடிவாதமாக பட்டினி கிடந்து கடைசியில் நோயாளி ஆகி வருவதைத்தான். அளவான சத்தான உணவும், முறையான உடற்பயிற்சியும் உடலை ஆரோக்யமாகவும், நன்றாகவும் வைக்கும் என்பதனை இவர்களுக்கு இன்னும் எத்தனை மீடியாக்கள் மூலம் சொன்னாலும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்ற ஆதங்கங்கள் மருத்துவ உலகில் இருக்கின்றது.

நோய் :

இயற்கையான ஆரோக்கியம் இல்லாமல் சாதாரண சிறிய ஜலதோஷம் முதல் மிக கடுமையான நோய் வரை உடலுக்கு ஏற்படுவது எதுவுமே உடல் நலபாதிப்பு தான். உடலுக்கு ஏற்படும் காயம், தீங்கு, நோய், எலும்பு முறிவு இவை அனைத்தும் உடல் நல பாதிப்புதான். வேலை இடத்தில் ஏற்படும் விபத்துகள், தொழில் காரணமாய் (உ.ம்) புகை, தூசு போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகளும் உண்டு. சதா மனப்புழுக்கம், வேதனை, உடல் நலத்தினை கவனியாமல் இருத்தல் இவற்றினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளும் உண்டு. கிருமிகள், வைரஸ் இவற்றினால் ஏற்படும் பாதிப்புகளும் உண்டு.

ஆக ஆரோக்கியம் என்பது உடலும், உள்ளமும் சேர்ந்ததுதான். ஆனால் மனிதன் இன்று மிக தைரியமானவனாக இருக்கின்றான். செவ்வாயில் குடியேற முயல்கிறான். இரவை பகலாக்குகிறான். உலகை ஒரு கையளவு பெட்டிக்குள் கொண்டு வந்து விடுகிறான். நொடியில் நூறு செயல்களைச் செய்யும் ஆற்றல் பெற்றவனாய் இருக்கின்றான்.

ஆனால் இரண்டு விஷயத்தில் அவனால் ஜெயிக்க முடியவில்லை. ஒன்று நோய் மற்றொன்று நிம்மதி. நோயைப் பற்றி பயப்படாத மனிதனே இல்லை. சிறிது உடல் நலக்குறைவானாலும் அதிக அமர்களம் செய்பவர்களும் உண்டு. அதிக பாதிப்பினை அறிந்தும் அலட்சியமாய் இருப்பவர்களும் உண்டு. மனிதன் இன்னமும் அவதிப்படுவது அவனது நாக்கால் மட்டுமே. சொற்களிலும் கட்டுப்பாடு தேவை. நான்கு சுவைக்கும் அடிமையாகாத கட்டுப்பாடும் தேவை.

சிலருக்கு அடிக்கடி ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். முதலில் இவர்களுக்கு ஏதாவது குறைபாடு இருக்கின்றதா என்று மருத்துவ பரிசோதனை செய்யுங்கள். இது ஒரு பழக்கம் என்றால் அவருக்கு உடன் இருப்பவர்கள் இப்பழக்கத்திலிருந்து வெளி வர உதவ வேண்டும். இல்லையெனில் அவர் நிரந்தர நோயாளி ஆகி விடுவார். ஏதாவது சாப்பிட வேண்டும் என்று முறையான நேரத்தில் தோன்றினால் சிறிது நீரோ, மோரோ, எலுமிச்சை சாரோ, சிறு துண்டுகள் பழமோ அருந்துங்கள். அடிக்கடி டீ, காபி, வடை, போண்டா போன்றவை மருத்துவர்களுக்கும் மருத்துவமனைக்கும் நீங்கள் செலுத்தும் நேர்த்திக் கடனாகி விடும் என்பதனை உணருங்கள். நோயிலிருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள்.

* நிரூபிக்கப்பட்ட பல தீர்வுகள் உள்ளன. கொட்டும் மூக்கும், சதா இருமலும் தாக்கப்பட்டவர்களுக்கு எதிரில் இருப்பவர்களுக்கும் ஆபத்து.
* அடிக்கடி கைகளை சுத்தம் செய்யுங்கள். தரமான சோபு கொண்டு சுத்தம் செய்யுங்கள். கையில் ஆண்டி செப்டிக் லோஷன் வைத்திருங்கள். அவ்வப்போது இதன் மூலம் சிறிது எடுத்து கைகளை துடைத்துக் கொள்ளுங்கள். அநேக நோய்களில் இருந்து இது உங்களை காப்பாற்றி விடும்.
* உங்கள் துண்டு, சீப்பு, ரேஸர், கைக்குட்டை, சோபு இவைகளை அன்பு என்ற பெயரில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கிருமி, வைரஸ், பூஞ்சை இவை எளிதாய் பரவும்.

* தும்மும் பொழுதும், இருமும் பொழுதும் கைகுட்டையால் உங்கள் வாயை சற்று பொத்திக் கொள்ளுங்கள். கிருமிகளை பரவாதிருக்கச் செய்யும்.
* தேவையான ‘வாக்சின்’களை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.
* மீஞ்சு, பழைய உணவுகளை தவிருங்கள். காய்கறிகளை நன்கு கழுவுங்கள்.
* பயணம் செய்யும் பொழுது குடிநீரில் அதிக கவனம் செலுத்துங்கள்.
* மூக்கு, வாய், கண் இவற்றில் அடிக்கடி கைகளை வைக்காதீர்கள்.

* கொசு தவிர்ப்பு முறைகளை கையாளுங்கள்.
* உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் அவசியம்.
* நோயாளிகளின் அருகில் செல்ல நேரும் பொழுது உங்களை காத்துக் கொள்ளுங்கள்.
* நீங்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் வீட்டில் இருங்கள்.

* சுகாதார பழக்க வழக்கங்களை பழகுங்கள்.
* உங்கள் மனோ சக்தி உங்களை ஆரோக்கியமாய் வைக்க வல்லது.
* மரணத்தை மனிதன் வெல்ல முடியாதுதான். ஆனால் வாழும் காலம் வரை ஆரோக்கியமாய் வாழ அவனால் முடியும்.201612200922472916 illnesses come to hunger SECVPF

Related posts

உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் நமது தினசரி செயல்பாடுகள்!!!

nathan

இத படிங்க வெந்தயத்தை தேநீர் செய்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்…!!

nathan

தொற்று நோயோட அறிகுறியாம்! உங்க முடி மற்றும் வாயில் இந்த அறிகுறிகள் தெரிஞ்சா…

nathan

இப்படி ப்ளான் பண்ணி வேலைப் பண்ணா, அலுவலக மன அழுத்தமே வராது!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…மன அழுத்தம் மூலமாக உங்கள் உடலில் ஏற்படும் விசித்திர மாற்றங்கள்!!!

nathan

உங்க ராசிப்படி எந்த இரண்டு ராசிக்காரங்கள திருமணம் செஞ்சா உங்க வாழ்க்கை சூப்பரா இருக்கும் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தெரிந்து கொள்ளுங்கள்! அளவுக்கு அதிகமான தூக்கம் ஆரோக்கியமற்றது: ஏன்?

nathan

உங்கள் கூந்தல் ஆரோக்கியமானதா என்பதை அறிந்து கொள்ள…

nathan

உங்களுக்கு தெரியுமா இத தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டா எலும்புகள் வலிமையாகும் ?

nathan