sl4079
பழரச வகைகள்

வியட்நாம் கீர்

என்னென்ன தேவை?

ஜவ்வரிசி – 1/2 கப்,
பாசிப் பருப்பு – 1/4 கப்,
வாழைப்பழம் – 2,
வெல்லத் துருவல் – 1/2 கப்,
வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்,
வறுத்த எள் – 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்ப்பால் – 1 கப்,
பூசணி விதை – 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியை 3, 4 மணி நேரம் நீரில் ஊற விட்டு வேக வைத்து நீரை வடிக்கவும். வாழைப்பழத்தை 10 நிமிடம் ஆவியில் வேக விட்டு சிறு துண்டாக நறுக்கவும். பாசிப்பருப்பை வேக விடவும். வெல்லப்பாகு காய்ச்சி, வெந்த பருப்பில் சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும். அடுத்து தேங்காய்ப்பாலில் 1 கொதி விட்டு இறக்கவும். ஒரு பவுலில் முதலில் வாழைப்பழத்துண்டு போட்டு, அதன் மீது ஜவ்வரிசி, பாசிப்பருப்பு மற்றும் வெல்ல கலவை பிறகு தேங்காய்ப் பால் ஊற்றி பொடித்த வேர்க்கடலை, வறுத்த எள், வறுத்த பூசணி விதை தூவிப் பரிமாறவும்.sl4079

Related posts

உடலுக்கு குளிர்ச்சி தரும் லெமன் – புதினா ஜூஸ்

nathan

மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தி

nathan

இஞ்சி மில்க் ஷேக்

nathan

சத்தான டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி

nathan

சுவையான கேரட் ஜூஸ்

nathan

சீதோஷ்ண நிலைக்கேற்ற பழக்கலவை (ட்ராபிகல் ப்ரூட் சாலட்):

nathan

செரிமானப் பிரச்சனையை போக்கும் எலுமிச்சை ஜூஸ்

nathan

கேரட் லஸ்ஸி

nathan

மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ்

nathan