28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
13 1439461436 6dietitianrevealshowtogetthebestfromyourfood
ஆரோக்கிய உணவு

உடல் எடையை குறைக்க உணவுகளை இப்படி தான் சமைத்து சாப்பிட வேண்டும்!!!

உடல் எடை என்பது எவ்வளவு பெரிய பிரச்சனை என்பது உடல் பருமன் பிரச்சனையில் வாழும் மக்களுக்கு மட்டும் தான் தெரியும். பொது வாழ்விலும் சரி, உடல் நலம் சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி, இது மனிதனை பெரும் பாடு படுத்திவிடும்.

உடல் எடையை குறைக்க எண்ணற்ற டயட் முறைகள் இருக்கின்றன. நிறைய உணவுகளை தொடர்ந்து சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைந்துவிடும் என பலவன கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனாலும் கூட உடல் எடை குறைந்திருக்காது.

இதற்கு, தெரிந்தோ தெரியாமலேயோ அவர்களே தான் காரணமாக இருப்பார்கள். பத்து நாட்கள் டயட்டை பின்பற்றிவிட்டு ஒரு நாள், ஓர் வேளை மட்டும் ருசிக்காக சாப்பிடுவார்கள். இது மீண்டும் அவர்களது உடல் எடையை அதிகரிக்க செய்துவிடும்.

நீங்கள் ஆசைப்பட்ட உணவுகளை, நீங்கள் ஆசைப்படும் போதெல்லாம் சாப்பிடலாம். ஆனால், அதை எப்படி சமைத்து சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்குமென்று தெரிந்துக் கொண்டு சாப்பிடுங்கள்….

நல்ல கொதிநிலையில் வேக வைத்து சாப்பிடுவது நீர் நன்கு கொதித்தவுடன் காய்கறிகளை வேக வைத்து சாப்பிடும் முறை. கீரை உணவுகள் மற்றும் தக்காளி போன்ற காய்கறி உணவுகளை இவ்வாறு சமைத்து சாப்பிடலாம். இது, உடலுக்கு பல வகைகளில் நன்மையை விளைவிக்கும்.

ஆவியில் வேக வைத்து சாப்பிடுவது காய்கறி உணவுகளில் இருக்கும் சத்துகள் குறையாமல் சாப்பிட, ஆவியில் வேக வைத்து சாப்பிடலாம். காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை இவ்வாறு சமைத்து சாப்பிடலாம். மீன்களை கூட வறுத்து சாப்பிடுவதை தவிர்த்து வேக வைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது என கூறப்படுகிறது.

சிறிதளவு எண்ணெயில் சமைக்கும் முறை எண்ணெய் தான் உங்களுக்கு உணவில் ருசி அதிகரிக்க காரணமாக இருக்கிறது. இதை தவிர்க்க, சிறிதளவு எண்ணெய் மட்டும் பயன்படுத்தி வாட்டி எடுத்து சமைத்து சாப்பிடலாம். சிறிதளவு எண்ணெயாக இருந்தாலும் கூட ஓரிரு நிமிடங்கள் தான் பயன்படுத்த வேண்டும். அதிக நேரம் வாட்டுவது, எண்ணெய் சத்து உணவில் அதிகம் சேர்ந்துவிட காரணமாகிவிடும். இது, உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

மேலோட்டமாக வறுப்பது உணவை முழுமையாக வறுக்காமல், மேலோட்டமாக, மொறுமொறுப்பாக வறுத்து சாப்பிடுவது. இது, சத்துகள் உணவிலேயே தங்க வைக்க உதவும், மற்றும் உணவிற்கு ருசியையும் சேர்க்கும். மீன் மற்றும் இறைச்சி உணவுகளை முதலில் வேகவைத்துவிட்டு பிறகு மேலோட்டமாக வறுத்து சாப்பிடலாம். இது, உடல் எடை அதிகமாகாமல் தடுக்க உதவும்.

உடலுக்கு நல்லது இயற்கையாகவே கொழுப்புச்சத்து அதிகம் இருக்கும் உணவுகளை கிரில் முறையில் சமைத்து சாப்பிடலாம். இது, உணவில் இருக்கும் கொழுப்பை கரைத்துவிடும். எண்ணெயில் பொரித்து சாப்பிடுவது உடல்நலத்திற்கு தீங்கானது. இதற்கு பதிலாக நீங்கள் கிரில் முறையில் சமைத்து சாப்பிடலாம்.

கிரில் முறையில் சாப்பிடும் உணவுகள் சிக்கன், மட்டன் போன்ற இறைச்சி உணவுகளை இவ்வாறு தீயில் வாட்டி சாப்பிடலாம். இது, கொழுப்பை கரைத்துவிடும். மற்றும் நன்கு வேக வைத்துவிடும். இதனால், செரிமான பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. இந்த முறையில் சமைப்பது, உடலில் கொழுப்பு சேராமலும் பார்த்துக் கொள்ளும், உணவிற்கு நல்ல ருசியையும் தரும்.
13 1439461436 6dietitianrevealshowtogetthebestfromyourfood

Related posts

கொய்யாவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

சுவையான குடைமிளகாய் மசாலா

nathan

வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் சீரகக் குழம்பு

nathan

அவசியம் படிக்க..கேன்சர் வராமல் இருக்க இந்த உணவுகளை உண்ணாதீர்!

nathan

வாழைப்பழத்தை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

இந்த கீரையின் தொக்கை சாப்பிட்டால் போதும்… நோய்கள் பறந்துபோகுமாம்…!

nathan

கர்ப்பிணிகளே பீட்ரூட்டை அதிகமாக சாப்பிடுங்க சிசுவுக்கு ரொம்ப நல்லது..!

nathan

டயட்டில் இருப்போருக்கான… ஓட்ஸ் உப்புமா

nathan

இலங்கை ஆப்பம் செய்யணுமா?

nathan