27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
05 1438766666 1
மருத்துவ குறிப்பு

கருத்தரிப்பதற்கு முன் கணவன், மனைவி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள்!!!

திருமணத்தின் அடிப்படை என இன்றி, ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்வியல் அடிப்படையே அவர்களது இனத்தை பெருக்குவது தான். இதில் மற்ற உயிரினங்களுக்கு கருவுறுதல் அல்லது பிரசவத்தின் போது ஏற்படும் திடீர் பிரச்சனைகள் பற்றி தெரியவோ, அறியவோ வாய்ப்புகள் இல்லை. ஆனால், ஆறறிவு ஜீவனான மனிதர்களுக்கு அறிய வாய்ப்புகள் உண்டு.

எனவே, கருவுறுதலுக்கு முன்னரே, பிரசவம் குறித்த சில அறிகுறிகள் ஏன் ஏற்படுகிறது, உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் போன்ற விஷயங்களை கணவன், மனைவி இருவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்….

பெண்களுக்கு தாடி முளைக்கும் முகத்தில் முடி முளைப்பது வித்தியாசமான விஷயமில்லை. இதுவும் ஒருவகையான அறிகுறி தான். கர்பகாலத்தில் பெண்களுக்கு கொஞ்சம் முகத்தில் கேசம் வளரத்தான் செய்யும். இதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. கர்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தான் இதற்கு காரணம். இது, தானாக சரியாகிவிடும், நிலைக்காது

மலம் கழித்தலில் பிரச்சனை ஏற்படும் கர்பகாலத்தின் போது பெண்களுக்கு குடலியக்கத்தில் சிறிய குறைபாடு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள், இது, இவர்களுக்கு குமட்டல் ஏற்படும் போதே தொடங்கிவிடுகிறது என அவர்கள் கூறுகிறார்கள். இதனால், சீரான முறையில் மலம் கழித்தல் நிகழ்வு ஏற்படாமல் இருக்கலாம். குடலியக்கத்தில் ஏற்படும் அழுத்தம் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

வாயுப் பிரச்சனை பிரசவ காலத்தில் வாயுப் பிரச்சனை சாதாரணமாக ஏற்படும் ஒன்று தான். உணவு செரிமானம் மிக மந்தமாக நடப்பது இதற்கான ஓர் காரணம் என கூறுகிறார்கள். மற்றும் இந்த காலத்தில், வாயு உணவுகளை தவிர்ப்பது நல்லது அதற்கு பதிலாக நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம், ஏனெனில்,இது செரிமானத்தை சரிசெய்ய உதவும்.

ஜொள்ளு வடியும் பெரும்பாலும் யாருக்கும் ஏன் திடீரென பிரசவ காலத்தில் ஜொள்ளுவிடும் பழக்கம் வருகிறது என தெரியாது. தூங்கி எழுந்து பார்த்தல், தலையணை முழுக்க ஜொள்ளாக இருக்கும். இதற்கு, ஹார்மோனில் ஏற்படும் மாற்றத்தினால், அதிக அளவு சுரக்கும் எச்சில் தான் காரணம் என கூறுகிறார்கள்.

குறட்டை
வாயுத்தொல்லை போல தான் இந்த குறட்டை பிரச்சனையும், பிரசவ காலத்தில் இது சாதாரணம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பிறப்புறுப்பை சுத்தம் செய்தல் நிறைமாத கர்பிணியாக இருக்கும் போது, பெண்களே அவர்களது பிறப்புறுப்பை காண இயலாது. அந்த அளவு வயிறு பெரியதாய் இருக்கும். இந்த சமயங்களில் அவ்விடத்தில் முடிகளை அகற்றுவது அவர்களுக்கு சிரமமாக இருக்கும். ஆயினும், கணவன் அல்லது தாயின் உதவியோடு அவ்விடத்தில் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

உடலுறவின் போது வலி குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஏற்படும் போது கண்டிப்பாக ஓரிரு மாதங்களுக்கு வலி ஏற்படும். இதற்கு காரணம், பிரசவிக்கும் போது பெண்ணுறுப்பின் உட்பகுதி தசைகளில் காயங்கள் ஏற்பட்டவை தான். இது தானாக சரியாகிவிடும். நீண்ட காலம் வலி ஏற்பட்டால் மருத்துவரை அணுக மறக்க வேண்டாம்.

உங்களுக்கே தெரியாமல் சிறுநீர் கழிப்பீர்கள் குழந்தையின் அழுத்தத்தினாலும், அசைவினாலும், உங்களுக்கே தெரியாமல் சிறிதளவு, நடக்கும் போது, சிரிக்கும் போது, தும்மும் போது சிறுநீர் கழிக்க நேரிடும்.
பிறப்புறுப்பு பெரியதாகும் பிரசவ காலத்தின் கடைசி மாதங்களின் போதும், பிரசவத்திற்கு சில நாட்களும் பெண்களுக்கு பிறப்புறுப்பு கொஞ்சம் பெரியதாய் காட்சியளிக்கும். இதற்காக பயப்பட தேவையில்லை இது மிகவும் இயல்பான ஒன்று. சில நாட்களில் தானாக அதுவே பழைய நிலைக்கு வந்துவிடும்.

05 1438766666 1

Related posts

சமூகத்தில் பெண்கள் மீதான கண்ணோட்டம்

nathan

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்

nathan

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கனுமா? சூப்பரா பலன் தரும்!!

nathan

பல்வலிக்கு உடனடி நிவாரணம்: இதை செய்திடுங்கள்!

nathan

கண், உள்ளங்கை, நெற்றி துடித்தால் என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா?

nathan

எச்சரிக்கை! ஆரோக்கியம் என்று நினைத்து நீங்கள் செய்யும் தவறுகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சிரமமே இல்லாத பிரசவத்திற்கு பழங்கால இந்தியர்கள் கையாண்ட இரகசிய சூட்சமங்கள்!

nathan

நொச்சி தாவரத்தின் மருத்துவ குணங்கள்

nathan

குழந்தையின் காது பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது?

nathan