27.7 C
Chennai
Monday, Mar 17, 2025
201612171057493518 semiya vegetable biryani SECVPF
சைவம்

சூப்பரான சேமியா வெஜிடபிள் பிரியாணி

சேமியாவில் பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். அதை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

சூப்பரான சேமியா வெஜிடபிள் பிரியாணி
தேவையான பொருட்கள் :

சேமியா – 200 கிராம்
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 1
ப.மிளகாய் – 2
கேரட் – 25 கிராம்
பீன்ஸ் – 25 கிராம்
பட்டாணி – 25 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 3
கசகசா – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
தனியா தூள் – கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, நெய் – தேவைக்கு
சோம்பு – அரை ஸ்பூன்

செய்முறை :

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சேமியாவை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.

* இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, கசகசா முதலியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாய், தக்ககாளி, கொத்தமல்லி, கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காய்கறிகளை முக்கால் பாகம் வேக வைத்து கொள்ளவும்.

* வாணலியில் நெய் விட்டு சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

* இதனுடன் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* பிறகு அதில் தேவையான அளவு உப்பு, 200 கிராம் சேமியாவுக்கு 400 கிராம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

* தண்ணீர் கொதி வந்தவுடன் சேமியாவை அதில் கொட்டி தண்ணீர் வற்றும் வரை மூடி வைக்கவும்.

* தண்ணீர் வற்றி உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சூப்பரான சேமியா பிரியாணி ரெடி.

* இந்த சேமியா பிரியாணியில் சிக்கன், மட்டன், முட்டை சேர்த்தும் செய்யலாம்.201612171057493518 semiya vegetable biryani SECVPF

Related posts

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் ஆலூ சப்ஜி

nathan

கோவைக்காய் பொரியல்

nathan

மஷ்ரூம் புலாவ்

nathan

பனீர் ஃப்ரைடு ரைஸ் செய்முறை

nathan

சில்லி சோயா

nathan

சிம்பிளான… வெஜிடேபிள் தம் பிரியாணி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான காரமான காளான் மஞ்சூரியன்

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பலாப்பழ வறுவல்

nathan