24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
1465216565 3158
சிற்றுண்டி வகைகள்

பிரெட் வெஜிடபிள் புலாவ்

தேவையான பொருட்கள்:

தேங்காய் – 1/2 மூடி
அரிசி – 2 கப்
ரொட்டித் துண்டுகள் – 3
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3 பெரியது
உருளைக்கிழங்கு – 100 கிராம்
பீன்ஸ், பட்டாணி, காரட், காலிபிளவர் – 1/4 கிலோ
பச்சை மிளகாய் – 6
புதினா – சிறிதளவு
பூண்டு – 5 பல்
இஞ்சி – சிறு துண்டு
நெய் – தேவையான அளவு

செய்முறை:

* தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* ரொட்டித் துண்டுகள் கட் செய்து எண்ணெயில் பொரித்து எடுத்து பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டு இரண்டையும் லேசாக அரைத்துக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், புதினா இவைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* காரட், பீன்ஸ், காலிபிளவர் இவைகளை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
* வாணலியில் தேவையான அளவு நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, அரைத்த இஞ்சி, பூண்டு விழுதைப்போட்டு வதக்கவும்,
* அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினாவை சேர்த்து வதக்கி, வதங்கியதும் நறுக்கிய காய்கறிகளையும், பட்டாணியையும் போட்டு அரிசி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.
* காய்கறிகள் நன்றாக வெந்து தண்ணீர் இல்லாமல் ஆன பிறகு பொரித்தரொட்டித் துண்டுகளைப் போட்டு கிளறி எடுத்து வைக்கவும்.
* தேவையானால் வாசனைக்கு 2 டீஸ்பூன் நெய் விடலாம். எளிய முறையில் செய்யக்கூடிய புலாவ் இது.1465216565 3158

Related posts

இளநீர் ஆப்பம்

nathan

பாதாம் சூரண்

nathan

ஆப்பம் செய்வது எப்படி?

nathan

சத்து நிறைந்த ராகி ஆலு பரோட்டா

nathan

கடலைப்பருப்பு ஸ்வீட் கேசரி

nathan

சத்தான சுவையான கேழ்வரகு டோக்ளா

nathan

வேர்க்கடலை லட்டு

nathan

லெமன் இடியாப்பம்

nathan

சிம்பிளான. சீஸ் மக்ரோனி

nathan