26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
21 laduu 20 1461153757
சைவம்

சப்பாத்தி லட்டு

நீங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யும் போது, எஞ்சிய சப்பாத்தியை தூக்கி எறியாமல், அதனைக் கொண்டு சில்லி சப்பாத்தி, சப்பாத்தி லட்டு போன்ற வித்தியாசமான ரெசிபிக்களை செய்து சுவைக்கலாம். இங்கு அதில் ஒன்றாக சப்பாத்தி லட்டு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த சப்பாத்தி லட்டுவின் எளிய செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்: சப்பாத்தி – 3 வெல்லம் – 1/4 கப் நெய் – 2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் பாதாம் – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை: முதலில் சப்பாத்தியை தோசைக்கல்லில் போன்று மொறுமொறுவென்று டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை சிறு துண்டுகளாக உடைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு அத்துடன் வெல்லம் சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் ஏலக்காய் பொடி, நெய், நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் ஒரு கையளவு எடுத்து லட்டு போன்று உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்படி அனைத்தையும் செய்தால், சப்பாத்தி லட்டு ரெடி!!!

21 laduu 20 1461153757

Related posts

வீட்டிலேயே செய்யலாம் பன்னீர் பஹடி

nathan

ஈஸி லன்ச் :(10 நிமிடத்தில் செய்து விடலாம் )

nathan

பேச்சுலர்களுக்கான… பச்சை பயறு குழம்பு

nathan

வீட்டில் எளியமுறையில் செய்யக்கூடிய வாழைக்காய் சிப்ஸ்

nathan

வேர்க்கடலை குழம்பு

nathan

தர்பூசணிக் கூட்டு

nathan

முருங்கைக்காய் அவியல் செய்வது எப்படி

nathan

சென்னா தேங்காய்ப்பால் குழம்பு

nathan

காளான் குழம்பு

nathan