29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
17 1463461040 3 snoringkills
மருத்துவ குறிப்பு

எச்சரிக்கை! பானைப் போன்ற தொப்பை இந்த 10 நோய்களை உண்டாக்கும் என்பது தெரியுமா?

தற்போது பலருக்கும் இருக்கும் ஓர் பெரிய சவால் தொப்பையைக் குறைப்பது தான். ஏனெனில் நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு 90 சதவீத காரணம் அடிவயிற்றில் தேங்கும் கொழுப்புக்கள் தான்.

தொப்பையைக் குறைக்கும் முயற்சியில் நாம் ஒவ்வொருவரும் ஈடுபடாமல் இருந்தால், நாளடைவில் இந்த தொப்பையால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பல நோய்களை பரிசாக பெற வேண்டி வரும்.

ஆய்வு ஒன்றில், ஆண்கள் 40 இன்ச்சிற்கு அதிகமாக இடுப்பளவையும், பெண்கள் 35 இன்ச்சிற்கு அதிகமாக இடுப்பளவையும் கொண்டிருந்தால், அவர்களுக்கு குறிப்பிட்ட நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இங்கு வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களால் சந்திக்க நேரிடும் 10 நோய்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும், அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்களால் சீராக மூச்சு விட முடியாது. சுவாசிப்பதில் அவர்கள் சிரமத்தை உணர்வார்கள். ஆய்வு ஒன்றில் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் உள்ளவர்களுக்கு தொப்பை வருவதற்கு, போதிய உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு இல்லாமல் இருப்பது தான் முக்கிய காரணமாக இருப்பது தெரிய வந்தது.

புற்றுநோய்
ஆய்வுகளில் 20 சதவீத புற்றுநோயாளிகளுக்கு இந்நோய் வருவதற்கு அதிகப்படியான உடல் பருமனும் ஓர் காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஆகவே தொப்பை இருந்தால் புற்றுநோயின் தாக்கம் அதிகம் உள்ளது என்பதை மறவாதீர்கள். மேலும் தொப்பையைக் குறைக்கும் பணியில் தீவிரமாக இறங்குங்கள்.

தூக்கத்தில் மூச்சுத்திணறல்
இந்த நாள்பட்ட தூக்க குறைபாடு உள்ளவர்கள், இரவில் தூங்கும் போது பலத்த சப்தத்துடன் குறட்டை விடுவதோடு, அவர்களால் நிம்மதியான தூக்கத்தையும் பெற முடியாமல் தவிப்பார்கள். இதற்கும் முக்கிய காரணம் தொப்பை தான்.

பித்தப்பை கல் நோய்
என்ன தான் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரித்து வந்தாலும், ஒருவரின் இடுப்பளவு அதிகமாக இருந்தால், அதனால் பித்தக்கற்கள் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். ஏனெனில் வயிற்றில் கொழுப்புக்கள் தேக்கம் அதிகரிப்பதால், பித்த நீர் சரியாக வெளியேற முடியாமல், பித்தப்பையில் கற்களாக உருவாக ஆரம்பிக்கும். எனவே தொப்பை வந்தால் ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயலுங்கள்.

கண்புரை நோய்
சொன்னால் நம்பமாட்டீர்கள், ஆய்வு ஒன்றில் வயதான காலத்தில் தொப்பையுடன், உயர் இரத்த அழுத்தம் இருந்தால், கண்புரை நோய் வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடுமையான கணைய அழற்சி
2012 இல் இதழ் ஒன்றில் 214 கணைய அழற்சி கொண்ட நோயாளிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிகப்படியான அடிவயிற்றுக் கொழுப்பு மற்றும் கடுமையான கணைய அழற்சிக்கு இடையே முக்கிய தொடர்பு உள்ளதென்பது கண்டுப்பிடிக்கப்பட்டது வெளிவந்தது.

பக்கவாதம்
இடுப்பைச் சுற்றி தேங்கும் கொழுப்புக்கள் பித்தப்பை, கணையம் மற்றும் கண்கள் போன்றவற்றை மட்டும் தாக்காமல், மூளையையும் பாதிக்கும். ஆய்வு ஒன்றில் தொப்பை இருப்பவர்களுக்கு பக்கவாதம் வரும் அபாயம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் மூளைக்கு தேவையான அளவு இரத்தம் செல்லாமல் மூளை செல்கள் இறப்பை சந்தித்து, அதனால் பக்கவாதத்தை ஏற்படுத்தும்.

கல்லீரல் கொழுப்பு நோய்கள்
இது வயிறு மற்றம் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்புக்கள் தேங்குவதால் ஏற்படும் ஓர் பொதுவான நோயாகும். இதனை அப்படியே விட்டுவிட்டால், மோசமான நிலைமைக்கு தள்ளப்படுவீர்கள்.

நீரிழிவு
40 வயதை எட்டும் இந்தியர்களை அதிகம் தாக்கும் ஓர் பொதுவான பிரச்சனை தான் நீரிழிவு. மேலும் நிறைய பேர் நீரிழிவு பிரச்சனையை சந்திப்பதற்கு தொப்பையும் ஓர் காரணமாக நிறைய ஆய்வுகள் கூறுகின்றன.

இதய நோய்கள்
அடிவயிற்று கொழுப்புக்களின் தேக்கத்தால், இதய நோய்கள் மிகவும் வேகமாக ஒருவரைத் தாக்கும். ஆகவே உங்களுக்கு இதய நோய்கள் வராமல் இருக்க வேண்டுமெனில், முதலில் உங்கள் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன், தொப்பையையும் கட்டுப்பாட்டுடன் வைத்து வாருங்கள்.

17 1463461040 3 snoringkills

Related posts

மன அழுத்தத்தின் மூலம் உடல் எடை எப்படி அதிகரிக்கிறது?

nathan

கேரட்டின் மருத்துவக் குணங்கள்

nathan

தோல் நோய்களை குணப்படுத்தும் புங்கை!

nathan

நீரிழிவு நோயினை கட்டுப்படுத்த முடியவில்லையா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

ஜலதோஷம் போக்கும் வெற்றிலை ரசம்!

nathan

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருக்கா? அப்ப கண்டிப்பா இத படிங்க…

nathan

மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்துவது சரிதானா?

nathan

உங்கள் நகங்களில் இந்த மாற்றங்கள் இருந்தால், உங்களுக்கு தோல் புற்றுநோய் இருக்கிறது என்று அர்த்தம்… ஜாக்கிரதை!

nathan

சிகரெட்டை நிறுத்த நீங்க ரெடியா? அப்ப அதுக்கு டிப்ஸ் கொடுக்க நாங்களும் ரெடி!

nathan