அழகிற்கும் ,இளமைக்கும், உணவிற்கும் முக்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே ஆரோக்கியத்திற்கு சான்று. ஆரோக்கியத்தின் அழகு சருமத்தில் வெளிப்படும்.
சருமம் இளமையாக இருக்க உணவு பெரும்பங்கு வகிக்கின்றது. கால் சதவீதம்தான் அழகு சாதனப் பொருட்கள் அழகை தருகிறது.
அன்றாடம் நச்சுக்களை சருமத்தின் துவாரங்கள் மூலமாகத்தான் உடல் வெளியேற்றும். அவற்றை வெளியேற்ற,உணவின் மூலமாகத்தான் தூண்டப்படுகிறது.
இல்லையென்றால் கழிவுகளும், நச்சுக்களும் சருமத்திலேயே தங்கி, சுருக்கங்களை உண்டாக்கும். சருமத்திற்கு ஊட்டமும் உணவின் மூலமாகத்தான் பெறப்படுகிறது. அப்படி சருமத்திற்கு இளமையையும், போஷாக்கையும் தரும் உணவுகள் எவையென பார்க்கலாமா?
தக்காளி :
தக்காளியை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், அதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் , நச்சு வாய்ந்த மூல்லக்கூறுகளை வெளியேற்றுகிறது. அதிக விட்டமின் சி மற்றும் ஏ உள்ளது. இவை கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்தி, சருமத்தை இறுகச் செய்கிறது. இதனால் சருமம் தொய்வடையாமல் இருக்கும்.
பெர்ரி பழ வகைகள் :
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூ பெர்ரி போன்ற பழங்கள் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்டுகளை கொண்டுள்ளன. மேலும் சிட்ரஸ் பழங்களான இவை சுருக்கங்களை சருமத்தில் வர விடாமல் தடுக்கும். தினமும் சாப்பிட்டு வரலாம் அல்லது வாரம் மூன்று முறையாவது சாப்பிட்டால் சுருக்கம் இல்லாத இளமையை 30 வயதுகளில் பெறலாம்
யோகார்ட் :
பெண்களுக்கு மத்திய வயதில் யோகார்ட் மிகவும் அவசியமான உணவு வகை. இதில் கால்சியம் அதிகம் உள்ளது. அதோடு, அந்த வயதில் சருமத்தில் இயற்கையாகவே வறட்சி ஏற்படும்.
யோகார்டில் நீர்சத்து அதிகம் இருப்பதால், சருமத்திலுள்ள வறட்சியை போக்கி, ஈரப்பதத்தை தக்க வைக்கும். நெகிழ்வுத் தன்மை தரும். சுருக்கங்கள் எட்டிப்பார்க்காது. தினமும் சாப்பிடுங்கள். ஆரோக்கியம் அழகு என இரண்டிற்குமே அற்புதமானது.
நட்ஸ் வகைகள் :
பாதாம், முந்திரி வால் நட் ஆகியவற்றில் இல்லாத சத்துக்கள் இல்லை. தாது சத்துக்களும் அதிக அளவு புரோட்டினும் உள்ளது. இவை கொலாஜனை அதிகரிக்கச் செய்யும். இதிலுள்ள ஒமேகா 2 கொழுப்பு அமிலங்கள் இளமையின் உபகரணமாகும். உடலை ஸ்லிம்மாக்கி, அழகுடன் வைத்திருக்க மிக முக்கிய தேவை.
தேன் :
தேன் செய்யாத அற்புதங்கள் இல்லை.அவற்றை முகத்திலும் போடலாம், உணவிலும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் இரவில் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடியுங்கள்.
மாற்றங்களை நீங்களே காண்பீர்கள். ஒரே மாதத்தில் முகம் புது பொலிவு பெறும். கொழுப்புகள் தங்க விடாமல், இளமையான தோற்றம் கிடைக்க தேன் அன்றாடம் சேர்த்துக் கொள்ளுங்கள்.