28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
11 puliyograe
சைவம்

கோயில் புளியோதரை

என்னென்ன தேவை?

வறுத்தரைக்க…
சிவப்பு மிளகாய் – 2,
கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகு – 1 டீஸ்பூன்,
வெந்தயம் – 1 டீஸ்பூன்,
தனியா – 1 டேபிள்ஸ்பூன்,
நல்லெண்ணெய் – அரை டீஸ்பூன்,
வெள்ளை எள்ளு – 1 டேபிள்ஸ்பூன்.

கடாயை சூடாக்கி, எண்ணெய் விடவும். ஒவ்வொன்றையும் தனித்தனியே தங்க நிறத்துக்கு வறுத்து ஆறியதும் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.

புளிக்காய்ச்சல் செய்யும் போது…

ஒரு பெரிய எலுமிச்சை அளவு பழைய கருப்பு புளியை அரை மணி நேரம் ஊற வைத்துக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். 1 கப் அளவு வேண்டும்.

நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் – 2,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்,
கட்டிப் பெருங்காயம் – 5 மிளகு அளவு,
கறிவேப்பிலை – 2 கொத்து,
வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
முந்திரி – 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பச்சரிசியை உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். புதிதாக வறுத்தரைத்த மிளகு, உப்பு, நல்லெண்ணெய் 5 டேபிள்ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.கடாயை சூடாக்கவும். எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, மிளகாய் சேர்த்து, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும். கட்டிப் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். தோல் நீக்கிய வேர்க்கடலை சேர்க்கவும். கெட்டியாகக் கரைத்த புளிக்கரைசல் விட்டு, குறைந்த தணலில் 15 நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும்.மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதித்து எண்ணெய் கக்கியதும் இறக்கவும்.

சமைத்த சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு, உப்பு சேர்த்து சாதம் உடையாமல் கிளறவும். புளிக்காய்ச்சலை சிறிது சிறிதாகச் சேர்த்து மெதுவாகக் கிளறவும். வறுத்தரைத்த பவுடர் 2 டீஸ்பூன், மிளகுத்தூள் தூவினால் கோயில் புளியோதரை தயார். நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்தால் கூடுதல் சுவை.உப்பு, புளிக்காய்ச்சல் அளவு, வறுத்தரைத்த பொடி, மிளகுத்தூள் போன்றவற்றை அவரவர் தேவைக்கேற்ப கூடவோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்.11 puliyograe

Related posts

ஆந்திரா ஸ்பெஷல் கம்பு வெஜிடபிள் சப்பாத்தி

nathan

கார்ன் குடைமிளகாய் கிரேவி

nathan

சுவையான மணத்தக்காளி வத்தக் குழம்பு

nathan

கறிவேப்பிலை சாதம்

nathan

செட்டிநாடு பக்கோடா குழம்பு

nathan

பூரிக்கு சூப்பரான சைடுடிஷ் வடகறி

nathan

பேச்சுலர்களுக்கான சிம்பிளான தவா மஸ்ரூம்

nathan

வெஜிடேபிள் தம் பிரியாணி

nathan

சீரகக் குழம்பு!

nathan