25.3 C
Chennai
Sunday, Mar 15, 2026
201612081354300815 eat raw radish health SECVPF
ஆரோக்கிய உணவு

முள்ளங்கியை பச்சையாக சாப்பிட்டால் நல்லதா?

முள்ளங்கியை வெள்ளரிக்காய், கேரட்டை போல் பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லதா என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.

முள்ளங்கியை பச்சையாக சாப்பிட்டால் நல்லதா?
முள்ளங்கிக் கிழங்கின் இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. பசியைத் தூண்டும் இயல்புடையவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும். இந்த இரு குணங்களுக்காகவே முள்ளங்கிக் கிழங்கை உலகம் முழுவதும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

சிறு நீரக கோளாறு இருப்பவர்கள் தொடர்ந்து தினமும் ஒரு கப் முள்ளங்கி சாறு அருந்தி வந்தால் எரிச்சல் மற்றும் சிறு நீரக வியாதிகள் நீங்கும்.

இருமல், நெஞ்சு சம்பந்தமான நோய்கள் (இதயவலி) வயிற்று உப்புசம் தொண்டைப்புண், தொண்டைக்கட்டு முதலியவை குணமாக ஒரு தேக்கரண்டி முள்ளங்கிக் கிழங்குச் சாறுடன் அதே அளவு தேனையும் கலந்து சாப்பிட வேண்டும். சிறிது உப்பும் இதில் சேர்க்கப்படவேண்டும். தினசரி மூன்று வேளை இது போல் சாப்பிட்டால் மேற்கண்ட கோளாறுகள் குணமாகும். இது மிக உயர்தரமான நன்மையைத் தரும் மருத்துவமுறையாகும்.

சரும வியாதிகளுக்கு மகத்துவமான நன்மைகளை தருகிறது. சரும வியாதிகள். படர்தாமரை நோய், முகத்தில் உள்ள கருப்புள்ளிகள், தேமல், மங்கு, எண்ணெய் வடிதல் ஆகியவற்றின் மீதும் முள்ளங்கி விதைப்பசையைத் தடவினால் குணமாகும்.

முள்ளங்கியை வெள்ளரிக்காயைப் போல் பச்சையாகத்தான் சாப்பிட வேண்டும். வேக வைத்து சாப்பிட்டால் அதிலுள்ள விட்டமின் மற்றும் மினரல்கள் அழித்துவிடும். கேரட், வெள்ளரி ஆகியவற்றுடன் கலந்து சாலட் செய்து சாப்பிடுவதால் மிகவும் நன்மைகள் கிடைக்கும்.

குழந்தைகள் மந்தபுத்தி இல்லாமல் சுறுசுறுப்பாய் இருந்து படிக்கவும், நன்கு உடலுறுதியுடன் வளரவும் முள்ளங்கிக் கிழங்குடன் முள்ளங்கிக்கீரையையும் அடிக்கடி உணவில் சேருங்கள். காரணம், கீரையில் பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.201612081354300815 eat raw radish health SECVPF

Related posts

சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் சாப்பிட்டுள்ளீர்களா?

nathan

தெரிந்து கொள்ளுங்கள்! சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய சாப்பிடக்கூடாத உணவுமுறைகள் என்ன…?

nathan

தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கு உதவும் உணவுகள் – பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிப்பது ஆரோக்கியமானது?

nathan

சளியை துரத்தும் தூதுவளை துவையல்!

nathan

கொண்டைக்கடலையை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள் ! உடல் எடையை குறைக்க

nathan

உங்களுக்கு தெரியுமா? தினம் ஒரு கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

கம்பு உணவு நோய்களுக்கு நிவாரணி! உணவே மருந்து !!

nathan

உணவைக் குறைத்து உடலை அழகாக்க..

nathan