கொள்ளு, பார்லி இந்த இரண்டையும் தினம் சாப்பிட்டு வந்தால் ஒரு சில மாதங்களிலேயே ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்.
உடல் எடையை குறைக்கும் கொள்ளு – பார்லி கஞ்சி
தேவையான பொருட்கள் :
வறுத்துப் பொடித்த கொள்ளு – அரை கப்
வறுத்துப் பொடித்த பார்லி மாவு – கால் கப்
சீரகத்தூள் – 1 சிட்டிகை,
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை :
* கொள்ளு மாவு, பார்லி மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
* அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
* நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி அடிபிடிக்காமல், கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
* மாவு நன்றாக வெந்து திக்கான பதம் வந்தவுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.
* சத்தான கொள்ளு – பார்லி கஞ்சி ரெடி.
* தினமும் இந்த கஞ்சியை பருகுவதால் உடல் உறுதி பெறும். கெட்டநீர் முழுவதும் வெளியேறும். ஊளைச்சதை கரையும். உடல் சிக்கென்று கட்டுக்கோப்பாக இருக்கும்.