கோடையில் சுரைக்காய் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை உட்கொண்டால், உடலில் வறட்சி ஏற்படாமல் இருக்கும். அதிலும் அதனை சப்ஜி போன்று செய்து, மதிய வேளையில் சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
இங்கு சுரைக்காய் சப்ஜியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்: சுரைக்காய் – 1 (பெரியது மற்றும் நறுக்கியது) வெங்காயம் – 2 (நறுக்கியது) பூண்டு – 5 பற்கள் (நறுக்கியது) இஞ்சி பேஸ்ட் – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது) மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் மல்லி தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் மாங்காய் தூள் – 1 டீஸ்பூன் உலர்ந்த வெந்தய இலை – 2 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பிரியாணி இலை – 1 உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, சுரைக்காயை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி தூள், மாங்காய் தூள் சேர்த்து 4-5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பின்பு உலர்ந்த வெந்தய இலை மற்றும் கரம் மசாலா செர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து சிறிது நேரம் சுரைக்காயை வேக வைக்க வேண்டும். 5-6 நிமிடம் ஆன பின்னர், வாணலியைத் திறந்து ஒருமுறை கிளறி, கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து பரிமாறினால், சுரைக்காய் சப்ஜி ரெடி!!!