36.7 C
Chennai
Monday, Jul 14, 2025
201612021402497951 Things to know about depression SECVPF
மருத்துவ குறிப்பு

மன அழுத்தம் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

மன அழுத்தம் வெறும் ஒரு சொல்லாகத்தான் பலரால் பார்க்கப்படுகிறது. ஆனால் அது தீர்வும் சிகிச்சையும் தேவைப்படும் ஒரு தீவிர மனநோய்.

மன அழுத்தம் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை
மன அழுத்தம் வருவதற்கு சில பொதுவான முக்கிய காரணங்களாக வேலை நெருக்கடிகள், மூளையில் ஏற்படும் வேதியியல் சமநிலையின்மை, முறையற்ற உறவுமுறைகள், பிரிவு, குடும்ப சீர்குலைவு ஆகியவைகளைக் கூறலாம். சில வேளைகளில் மன அழுத்தமானது ஷிசோப்ரெனியா மற்றும் பைபோலர் டிசார்டர் போன்ற தீவிர மன நோய்களால் கூட ஏற்படக்கூடும்.

மன அழுத்தம் வெறும் ஒரு சொல்லாகத்தான் பலரால் பார்க்கப்படுகிறது. ஆனால் அது தீர்வும் சிகிச்சையும் தேவைப்படும் ஒரு தீவிர மனநோய்.

உண்மையென்னவென்றால் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சோகம் மற்றும் பிற அறிகுறிகளை வெளிப்படுத்தமாட்டார்கள். ஆனால் பெரும்பாலான செயல்களில் ஈர்ப்பின்றி செயல்படுவார்கள். இது மற்றவர்களால் கவனிக்க இயலாது என்பது இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

மேலும் பலர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் "ஒருவழியாக அதிலிருந்து மீண்டுவிடுவார்" என நினைப்பதுண்டு. ஆனால் பெரும்பாலான நேரங்களில் மன அழுத்தமானது சரியான சிகிச்சையினால் மட்டுமே முழுமையாக குணப்படுத்த இயலும்.

மன அழுத்தத்தைப் பற்றிய மற்றுமொரு உண்மை என்னவென்றால் மன அழுத்தம் போக்கும் மருந்துகள் பெரும்பாலும் தற்காலிக நிவாரணிகளே. எனவே மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய மன நிலையை ஆழ்ந்து புரிந்து கொள்வது நீண்டகால மாற்றத்தைத் தரக்கூடிய சிகிச்சைக்கு உதவும்.

பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால், அது குழந்தைத் தனம் அதுவாகவே சரியாகிவிடும் என நினைப்பதுண்டு. ஆனால் அது ஆணோ பெண்ணோ, இந்த மன அழுத்த நோயானது எந்த வயதினரையும் பாதிக்கும் என்பதுடன் இதற்கு சிகிச்சை மிகவும் அவசியம்.

பலர் சோகம் மட்டுமே மன அழுத்தத்தின் அறிகுறி என நினைப்பர். ஆனால் மன அழுத்தம் செயல்பாடுகள் மற்றும் பேச்சில் தீவிரத் தன்மை, வெறுப்பு, சோர்வு என பிற அறிகுறிகளையும் கொண்டிருக்கும்.

மன அழுத்தத்தைப் பற்றிய வெளிப்படையான அறிகுறிகள் உடல்ரீதியான அறிகுறிகளையும் உள்ளடக்கியது. உளவியல் ரீதியான நோய்களுக்குண்டான தலை மற்றும் வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் இதற்கும் பொருந்தும்.201612021402497951 Things to know about depression SECVPF

Related posts

கழுத்து வலியை கவனித்தால் முதுகுவலியைத் தவிர்க்கலாம் தெரியுமா ???

nathan

வெள்ளையான பற்களை பெறுவதற்கான 5 ரகசியங்கள்!!!

nathan

சிறுநீரக கற்களும் அறுவை சிகிச்சையும்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ஒரு பொருள் சர்க்கரை நோயை அடியோடு விரட்டிடுமாம்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு அசைவில்லை என்றால் இப்படிச் செய்திடுங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்ப காலத்தில் மூசு முட்டுவது போல் உணர்வது ஏன்?ச்

nathan

காய்ச்சலோடு இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரணமா விடாதீங்க. இல்லன்னா உங்க உயிரை விடுவீங்க.

nathan

உங்களுக்கு தெரியுமா வாயில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளும்.. அவற்றைத் தடுக்கும் வழிகளும்…

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…முருங்கை பூவின் மருத்துவ மகிமை

nathan